»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கிளாமர் பக்கம் தலைகாட்டாமல் பாந்தமான முக அழகையும், இயல்பான நடிப்பையும் மூலதனமாகக் கொண்டுகதாநாயகியராக வலம் வருபவர்கள் ஸ்னேகாவும் மற்றும் உமாவும். இதில் ஸ்னேகா சில வெற்றிப் படங்களைஅவ்வப்போது தந்து வருவதால் தனது இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.

உமாவின் நிலை சற்று கவலைக்கிடம்தான். தென்றல் படத்தில் கர்ப்பிணியாகவும், பின்னர் 6 வயது பையனுக்குதாயாகவும் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் சதா, ஜோதிகா, கிரண் ஆகியோரை அணுகியுள்ளார்.

நானா? அம்மாவாகவா? என்று சொல்லி வைத்தாற்போல் மூன்று பேரும் கேட்டுள்ளார்கள். அதன்பின்பு உமாவைவைத்து அந்தப் படத்தை எடுத்தார் தங்கர்பச்சான். அந்தப் படத்தின் மூலம் உமாவுக்கு பாராட்டுகள் குவிந்தஅளவுக்கு வாய்ப்புகள் குவியவில்லை.

தமிழ்நாட்டில் சேலை கட்டி நடிப்பவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று போவோர், வருவோரிடம் எல்லாமல்புலம்பிக் கொண்டிருந்தார். இந் நிலையில் நகுலன் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகிடைத்துள்ளது.

கதாநாயகனாக செந்தமிழ் என்பவர் அறிமுகமாகிறார். வேஸ்ட் பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை வாங்கும் கடைநடத்துபவராக செந்தமிழ் நடிக்கிறார். இவரது முறைப்பெண்ணாக வெளிநாட்டில் படிக்கும் மாணவியாக உமாநடிக்கிறார்.

அன்பே அன்பே, ஸ்ரீ ஆகிய படங்களுக்கு கதை- வசனம் எழுதி இணை இயக்குநராக பணியாற்றிய ராஜா இந்தப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். சென்னை, மூணாறு, சாயல்குடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு வேகமாகநடந்து வருகிறது.

தென்றலுக்கு பின் உமா வசம் இருக்கும் ஒரே படம் நகுலன் தான். தனது எதிர்கால மார்க்கெட்டுக்கு இந்தப்படத்தைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil