»   »  சிவகார்த்திக்கேயனுடன் நடிக்க போட்டா போட்டி போடும் "ராசி"யில்லா நடிகைகள்!

சிவகார்த்திக்கேயனுடன் நடிக்க போட்டா போட்டி போடும் "ராசி"யில்லா நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திக்கேயனுடன் ஒரு படத்தில் நடித்தால் தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகி விடலாம் என்ற புதிய நம்பிக்கை தமிழ் நடிகைகள் மத்தியில் உருவாகியுள்ளதாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தமிழில் மெரினா படம் மூலம் ஹீரோ ஆனவர் சிவகார்த்திக்கேயன். தனது நகைச்சுவைப் பேச்சாலும், கடின உழைப்பாலும் தமிழில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக அவர் வலம் வருகிறார்.

அவரது நடிப்பில் வெளியான ரஜினி முருகன் இந்தாண்டின் முதல் வெற்றிப்படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் வசூல் மழை பெருவெள்ளமாக மாறியுள்ளதாம்.

ரசிகர் பட்டாளம்...

ரசிகர் பட்டாளம்...

இந்நிலையில், தொடர்ந்து வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் சிவகார்த்திக்கேயனை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் சிவகார்த்திக்கேயனின் படங்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் இருப்பது தான்.

ராசியில்லாத நடிகைகள்...

ராசியில்லாத நடிகைகள்...

அதேபோல், ராசியில்லாதவர்கள் என முத்திரை குத்தப்பட்ட நடிகைகள் சிலரும் சிவகார்த்திக்கேயன் படத்தில் நடிக்க முயற்சித்து வருகிறார்களாம். இவர்கள் ஸ்ரீதிவ்யாவையும், கீர்த்தி சுரேஷையும் பார்த்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீதிவ்யா...

ஸ்ரீதிவ்யா...

முதல்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் ராசியில்லாத நடிகை என்ற பெயர் கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்த ஸ்ரீதிவ்யாவிற்கு சிவகார்த்திக்கேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

கை நிறைய படங்கள்...

கை நிறைய படங்கள்...

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ரீதிவ்யா, தற்போது கை நிறைய படங்களுடன் தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.

கீர்த்தி சுரேஷ்...

கீர்த்தி சுரேஷ்...

இதேபோல், முதல்படமான இது என்ன மாயம் படம் சரியாக ஓடாததால், ராசி குறித்த கவலையில் இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால், அவரது இரண்டாவது படமான ரஜினி முருகன் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது.

செண்டிமெண்ட்...

செண்டிமெண்ட்...

எனவே, சிவகார்த்திக்கேயனின் ராசி தான், இந்த நடிகைகளின் வளர்ச்சிக்குக் காரணம் என செண்டிமெண்ட்டாக சில நினைக்கிறார்கள் சிலர். இதனால், ஏற்கனவே ராசியில்லாத நடிகைகள் என முத்திரைக் குத்தப்பட்ட சில நடிகைகள், சிவகார்த்திக்கேயனுடன் நடித்து தங்களது மார்க்கெட்டை நிலை நிறுத்த முயற்சித்து வருகிறார்களாம்.

எல்லாம் சரிதான்... ஆனால், எல்லோரும் சேர்ந்து சிவகார்த்திகேயனை காலி செய்து விடாமல் சரித்தான்!

English summary
The Kollywood sources says that, the unlucky actress of Tamil cinema is now competition with each other to act with Sivakarthikeyan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil