உங்க அம்மாக்கிட்ட போய் சொல்லு.. மோசமான உடை பற்றி கமெண்ட் அடித்த பத்திரிகையாளர்.. நடிகை ஆவேசம்!

மும்பை: பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என உடைக்கட்டுப்பாட்டுக்கு எதிராக போராடும் பெண்களே உர்ஃபி ஜாவேத் அணிந்து வரும் ஆடைகளை பார்த்தால் காரித் துப்புவார்கள்.

டிரெஸ் போட்ட மாதிரியே தெரியாமல் அந்த காலத்தில் ஸ்கூலுக்கு சிலர் புத்தகப் பையை தலையில் மாட்டிக் கொண்டு செல்வது போல ஒரு உடையை அணிந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு பாலிவுட்டின் இளம் ஹாட் குயின் வந்துள்ளார்.

அவரது உடையை பார்த்து ஏன் இப்படி படு கேவலமா டிரெஸ் பண்ணிட்டு வந்துருக்கீங்க என கேட்ட பத்திரிகையாளரிடம் பத்திரகாளியாக மாறி கத்தி விட்டார் உர்ஃபி ஜாவேத்.

சாதாரணமான பிகினி

சாதாரணமான பிகினி

கோலிவுட் நடிகைகள் மத்தியிலேயே பிகினி உடைகள் இப்போ சாதாரணமாக மாறிவிட்டது. அதனால், பாலிவுட் நடிகைகள் அதையும் தாண்டி எந்த அளவுக்கு ஆபாசத்தை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஆபாசமாக உடையணிந்து போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் ஃபாலோயர்களுக்காக பலரும் டாப்லெஸ் ஆகவும், டிரெஸ்ஸே போடாமலும் போட்டோ மற்றும் வீடியோக்களை போட்டு வருகின்றனர்.

உர்ஃபி ஜாவேத் அட்ராசிட்டி

உர்ஃபி ஜாவேத் அட்ராசிட்டி

உறித்த கோழியை போலவே ஆடை அணிந்திருப்பதே தெரியாத அளவுக்கு படு மோசமாக தனது முக்கால் வாசி அங்கங்கள் தெரியும் அளவுக்கு படு மோசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்துவது மட்ட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளுக்கும் அதே போன்ற உடைகளை அணிந்து கொண்டு வருவது பலரது கண்களையும் உறுத்தி வருகிறது.

மோசமான உடை

மோசமான உடை

இந்நிலையில், பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றுக்கு பச்சை நிற ஹூடி போன்ற உடையை உள்ளாடை அணியாமல் தலையில் மாட்டியபடி அரங்கத்திற்குள் வந்து அனைவரையும் அதிர வைத்தார். அவருடைய உடையை பார்த்து ரொம்ப மோசமான உடையாக இருக்கே இப்படியா நிகழ்ச்சிக்கு போட்டுட்டு வருவது என ஒரு பத்திரிகையாளர் கேட்டதும் அம்மணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

கோபத்தில் கத்தினார்

கோபத்தில் கத்தினார்

நான் எப்போதுமே உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களையும் புகைப்படக்கலைஞர்களையும் மோசமாக பேசி உள்ளேனா? என்னை பார்த்து எப்படி இப்படியொரு மோசமான கமெண்ட்டை பாஸ் செய்யலாம் என சொன்னவர் யாரென்று தெரியாத நிலையில், ஒட்டுமொத்த பேரையும் பார்த்து கோபத்தில் கத்திய உர்ஃபி ஜாவேத்தின் வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

உங்க அம்மா கிட்ட போய் சொல்லு

உங்க அம்மா கிட்ட போய் சொல்லு

மேலும், இன்னொரு முறை என் உடையை பற்றி யாரும் கமெண்ட் அடிக்கக் கூடாது என்றும், அப்படி உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தால், அதை உங்க அம்மாகிட்ட, உங்க தங்கச்சிக்கிட்ட போய் சொல்லுங்க என ஆவேசமாக பேசி உள்ளார். அவரது செயலுக்கு பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X