»   »  வடிவேலு, நமீதா, வெடிகுண்டு!!

வடிவேலு, நமீதா, வெடிகுண்டு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil


வைகைப் புயல் வடிவேலு முக்கா முக்கா மூணாவது முறையாக ஹீரோவாக நடிக்கப் போகிறார். படத்துக்கு வெடிகுண்டு முருகேசன் என்று பெயர் சூட்டியுள்ளனர். அவருக்கு ஜோடியாக கவர்ச்சி குண்டு நமீதா நடிக்கவிருக்கிறார்.

Click here for more images

இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம் நாயகனாக அவதாரம் எடுத்த வடிவேலு, அந்தப் படம் அபார வெற்றி பெற்றதால் அடுத்ததாக இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற புதிய படத்திலும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இன்னொரு படத்திலும் வடிவேலு நாயகனாக நடிக்கவுள்ளார். அப்படத்துக்கு வெடிகுண்டு முருகேசன் என பெயரிட்டுள்ளனர்.

முந்தைய இரு படங்களும் காமெடியை பின்புலமாகக் கொண்டவை. ஆனால் வெடிகுண்டு முருகேசன், சமூக கருத்துடன் கூடிய படமாகும். அதேசமயம் வடிவேலுவின் வெடி காமெடியும் படம் முழுவதும் இருக்குமாம்.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கியவர்தான் இப்படத்தையும் இயக்கவுள்ளார். பசுபதி வித்தியாசமான வேடத்தில் இதில் நடிக்கிறார். கிட்டத்தட்ட 2வது ஹீரோவாக அவர் படத்தில் தோன்றுகிறார்.

இதை விட முக்கியமான விஷயம், வடிவேலுவுக்கு ஜோடியாக செக்ஸ் பாம் நமீதா ஜோடி போடுகிறார். இதற்காக அவரை அணுகியுள்ளனராம். அவரிடமிருந்து பாசிட்டிவான பதில் வரும் என்று கூறப்படுகிறதாம்.

என்ன விலை கொடுத்தாவது நமீதாவை புக் செய்து விடுங்கள் என்று வடிவேலுவும் இயக்குநரிடம் வலியுறுத்தியுள்ளாராம். இதுதவிர விஜயகாந்த்தின் அரசாங்கம் படத்தில் நாயகியாக நடிக்கும் நவ்னீத் கெளரையும் பிடித்துப் போட பேச்சு நடந்து வருகிறதாம்.

விஜயகாந்த்தின் நாயகியையும் வளைத்துப் போட வடிவேலுதான் அணத்தி வருகிறாராம். என்ன காரணம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

தற்போது இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கும் வடிவேலு அதை முடித்து விட்டு இப்படத்திற்கு வருகிறாராம்.

Read more about: hero namitha vadivelu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil