»   »  காதலும் நம்ம ஹீரோயின்களும்!

காதலும் நம்ம ஹீரோயின்களும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிப்ரவரி 14 ம் தேதியின் கொண்டாட்டம் இன்னும் தொடர்கிறது. உலகமே காதலர் தினம் கொண்டாடுறப்போ நம்ம ஹீரோயின்கள் என்ன பண்றாங்க...? அவர்களிடம் அவர்களுடைய காதல்களைப் பற்றி கிளறினோம்.

ஊதாக் கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா

எனக்கு ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் மூலமா நிறைய 'ப்ரப்பசல்ஸ்' வந்துருக்கு. நான் எதையும் அக்செப்ட் பண்ணிக்கலை. ஏன்னா எனக்கு பிடிச்ச மாதிரி ஆள் கிடைக்கணும்.

ட்ரீம் பாய் எப்படி இருக்கணும்? வர்றவர் மேட் ஃபார் ஈச் அதரா இருக்கணும். நிறைய ஆசை இருக்கு. ஆனா இப்போதைக்கு லவ் பத்தி நினைக்கலாம் நேரமே இல்லைங்க...

கும்கி லட்சுமி மேனன்

கும்கி லட்சுமி மேனன்

லவ் ப்ரொபசல்கள் இதுவரைக்கும் வரவே இல்லை. லவ் லெட்டர் எண்ணிக்கை? பேப்பர்ல நிறைய வர்றதா எழுதுறாங்க.. ஆனா சத்தியமா ஒண்ணு கூட வரலை. எப்ப அனுப்பிவீங்க ஃபேன்ஸ்?

முட்டைக்கண்ணு ஜனனி ஐயர்

முட்டைக்கண்ணு ஜனனி ஐயர்

முதல் புரப்பசல் ஒண்ணாம் கிளாஸ்ல வந்தது. மேரேஜ் பண்ணிக்கிறியானு கேட்டான். அதுக்காக பிரின்சிபல்கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணி ஒரு வாரம் வெளில நிக்க வெச்சுட்டேன்.

காயத்ரி

காயத்ரி

ட்ரீம் பாய் எப்படி இருக்கணும்? நல்ல ஹைட்டா...க்யூட்டா.. ஹேண்ட்சமா...இருக்கணும் மவன் மட்டும் கையில கிடைச்சா...) முக்கியமா என்
அப்பா, அம்மாவுக்கு பிடிக்கணும்.

கவர்ந்த லவ் ப்ரொபசல்கள் காலேஜ்ல நிறைய வந்திருக்கு. இப்பல்லாம் வர்றதில்லையே...

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

ட்ரீம் பாய் எப்படி இருக்கணும்? செம்மையா இருக்கணும்...வெளில போனா
அட்லீஸ்ட் 4 பொண்ணுகளாவது ஜொள்ளு விடணும்...ஆனா அவன் என்னை மட்டும் தான் பார்க்கணும்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

லவ் லெட்டர்ஸ் - ரொம்ப கம்மி. விரல்லேயே எண்ணிடலாம். கேர்ள்ஸ் ஸ்கூல்தான். காலேஜ்ல அண்ணன் சீனியரா இருந்ததால எனக்கு லெட்டர் கொடுத்த ரெண்டு பசங்க செம மாத்து வாங்குனாங்க. அப்புறம் யார் கொடுப்பாங்க? இப்பவாவது
பயப்படாம ப்ரொபஸ் பண்ணுங்கப்பா...

ட்ரீம் பாய் எப்படி இருக்கணும்? - எதிர்பார்ப்பு இருந்தா கஷ்டம்
ஆகிடும்பா. யாருமே மேட் ஃபார் ஈச் அதர் கிடையாதே... அதனால யாரா இருந்தாலும் பரவாயில்லை. ஒரே கண்டிஷன். நான் அவரை லவ் பண்றதைவிட அதிகமா லவ் பண்ணனும்.

வேதிகா

வேதிகா

வரப்போறவர் எப்படி இருக்கணும்?

ரொம்ப நல்லவரா இருக்கணும். நல்ல புத்திசாலியா இருக்கணும்.சென்ஸ் ஆஃப்
ஹியூமர் முக்கியம்.

த்ரிஷா

த்ரிஷா

திரும்ப காதல், கல்யாணம்?

ஏன் கூடாது? எனக்கு இப்ப ஒருத்தரை பிடிச்சதுன்னா கூட காதல்ல விழுந்து

கல்யாணம் பண்ணிப்பேன். மேரேஜ், ரிலேஷனுக்கெல்லாம் எந்த தடையும் கிடையாது.

கல்யாணம் பண்ணி தான் ஆகணும்னு அவசியம் இல்லை. ஆனா கல்யாணத்து மேல இன்னும் நம்பிக்கை இருக்கு.

எத்தனை முறை உங்களுக்கு காதல் வந்துருக்கும்?

காதல் ரொம்ப அவசியமான ஒண்ணு. வாழறதுக்கு காதல் அவசியமான ஒண்ணு. எனக்கும் வந்துருக்கு. ஒண்ணு, ரெண்டு முறை வந்துருக்கு.

ஆனந்தி

ஆனந்தி

புரப்பசல்ஸ்?

நான் 10-வது படிக்கும்போது பிப்ரவரி-14 அன்னைக்கு புரோபோஸ் பண்ண வந்த ஒரு பையன், பயத்துல சாக்லேட் மட்டும் கொடுத்துட்டு ஓடிட்டான். அதை இப்போ

நெனைச்சாலும் சிரிப்புதான் வரும். ஏன்ப்பா இப்படிப் பயப்படுறீங்க?

பசங்கன்னா தைரியம் இருக்கணும்; தைரியமா புரபோஸ் பண்ணணும். ஆனா இப்ப சொன்னா கண்டிப்பா ரிஜெக்ட் பண்ணுவேன். ஏன்னா, நான் இப்போ ஹீரோயின்ல!'

கார்த்திகா

கார்த்திகா

புரப்பசல்ஸ்?

ஆமா...வேலண்டைன்ஸ் டே வருதுல்ல? உண்மையை சொல்லவா?

இதுவரைக்கும் யாருமே புரப்பஸ் பண்னலைப்பா... அதுல வருத்தம்தான். ஸ்கூல்லாம் கேர்ள்ஸ் ஸ்கூல் தான். நான் பார்க்கிறதுக்கு டாம்பாய்யா இருக்கறதாலயும், நான் கொஞ்சம்
டாமினேட் கேரக்டர்கறதாலயும் பசங்க பயந்துட்டாங்க போல...


இப்பகூட வெய்ட்டிங்பா.. யாரையாவது புரப்பஸ் பண்ண சொல்லுங்க... இப்ப நான் டாமினேட்டிங்லாம் விட்டாச்சு. அமைதியான பொண்ணாயிட்டேன்.

தொகுப்பு - ஆர்ஜி

English summary
Tamil cinema heroines lovers day mood and flashback.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos