»   »  மிஸ் ஆக்ரா வந்தனா

மிஸ் ஆக்ரா வந்தனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மிஸ் ஆக்ராவான வந்தனாவைத் தேடி மேலும் பல வாய்ப்புகள் வந்து குவியவே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஆக்ராவை சேர்ந்தவரான வந்தனாவுக்கு சின்ன வயசிலேயே மாடங்கில் ஒரு கண். இதனால் மும்பையில் போய் அதற்கான பயிற்சியெல்லாம் எடுத்தாராம். பின்னர் மிஸ் ஆக்ராவாக தேர்வானார்.

இதைத் தொடர்ந்து இந்தியில் நுழைய முயன்று தோற்றவரை தெலுங்கு படவுலகம் வாரியணைத்தது. அங்கு ஹைதராபாத் நவாப்,பிரம்மா ஆகிய படங்களில் நடித்து முடித்தார். கவர்ச்சியில் இவர் கதகளியாட்டம் போடவே மேலும் ஒரு படத்தில் புக் ஆனார்.

இதையடுத்து தமிழை நோக்கி நூல் விட்டார். அப்போது அஜந்தா படத்துக்கு அஜந்தா ஓவியம் மாதிரி ஒரு பிகரை தேடிக் கொண்டிருந்த யூனிட்டாருக்கு வந்தனா கண்ணில் படவே ஹீேராயினானார். இந்த படம் 4 மொழிகளில் படமாகி வருகிறது.

அஜந்தாவில் நடிப்போடு கிளாமரிலும் கலக்கி வரும் வந்தனாவைத் தேடி மேலும் 2 படங்கள் வந்துவிட்டன. அதில் ஒரு படம் தான் தவம். இதில் புக் ஆகி நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

அஜந்தா ஒரு முக்கோண காதல் கதையாம். வந்தனா பார்வையற்ற கிராமத்து பெண் ரோலில் நடிக்கிறார். அதில் நன்றாக நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறாராம். அடுத்த பாதியில் பார்வை கிடைத்து பாடகியாகியாவது போல் கதை செல்கிறதாம். இந்த இடத்தில் கிளாமரில் குதித்துவிடுகிறாராம்.

தவம் படத்தில் பெற்றோரை இழந்து உறவினர்களால் கஷ்டப்படும் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த இரண்டு படத்தையும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறேன். என்னுடைய முகம், என் பெயர் எல்லாம் தென்னிந்திய பெண் போல் இருப்பதாக டைரக்டர்கள் கூறுகின்றனர். தமிழில் நடிக்க வந்த நான் இப்போது முழு தமிழச்சியாகிவிட்டேன். தமிழ் பேச கற்றுக் கொண்டு வருகிறேன்.

இந்த படங்களை முடித்து விட்டு கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் மைத்துனர் அனிரோத்துடன் நடிக்கிறேன் என்கிறார் வந்தனா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil