Vanitha:ஓசியில போட்டா 1 மில்லியன் பேர் ஓடி வந்து பார்க்குறாங்களே.. வனிதா விஜயகுமார் ஒருவழியா ஹேப்பி!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது. ஓவர் பில்டப்புடன் சேனல் சேனலாக சென்று படம் அப்படி இருக்கு.. படம் இப்படி இருக்கு என பேட்டி கொடுத்து படத்திற்கு ஹைப்பை ஏற்றினாலும், படம் தியேட்டரில் வெளியான முதல் நாளே காற்று வாங்கியதால், அதிரடியாக முடிவு எடுத்த வனிதா படத்தை யூடியூபில் வெளியிட்டு காசு பார்க்க நினைத்தார். அதுவும் வேலைக்கு ஆகாததால் தற்போது ஒரு திட்டத்தை போட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த வனிதா விஜயகுமார். தன் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் சம்பாதித்த பணத்தை வைத்து, மிஸஸ் & மிஸ்டர் படத்தை இயக்கினார். அதில், ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, பவர் ஸ்டார் சீனிவாசன், கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.

Mrs amp amp Mr Vanitha Vijayakumar Jovika amp amp
Photo Credit:

கதை: மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் வனிதா, ராபர்ட் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்த்து வருகிறார்கள். குழந்தை வேண்டாம் என்கிற முடிவில், ராபர்ட் மற்றும் வனிதா இருவரும் இருக்கின்றனர். இந்த நேரத்தில் வனிதாவின் தோழிகள், குழந்தை தான் நாம் வாழ்ந்ததற்கான அடையாளம், அப்படி இருக்கும் குழந்தை வேண்டாம் என்று நீ எடுத்து இருக்கும் முடிவு தவறு என அறிவுரை கூறுகின்றனர். இதனால், வனிதாவிற்கு குழந்தை பெற்றும் கொள்ளும் ஆசை வருகிறது. ஆனால், ராபர்ட்டுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லாததால், 40 வயதிற்கு மேல் குழந்தை எதற்கு என கேட்கிறார். ஆனால், வனிதா தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதால், இருவருக்குள் சண்டை வந்து பிரிகிறார்கள். கடைசியில் வனிதாவின் ஆசைப்படி குழந்தை பிறந்ததா.. இல்லையா.. என்பது தான் கதை.

வனிதா: படத்தைப் பார்த்த பலர் படத்தில் பல படுக்கை அறை காட்சிகள் இருக்கிறது. கணவன் மனைவியாக இருந்தாலும் கூட இந்த படத்தை சேர்ந்து பார்க்க முடியாது என படத்தை கழுவி ஊற்றினார்கள். இதனால், படம் வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால், இரண்டு நாளிலேயே தியேட்டரில் படம் காத்து வாங்கியது. படம் தியேட்டரிலும் ஓடல, படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்காததால், அதிரடியான ஒரு திட்டத்தை போட்ட வனிதா, படம் வெளியான பத்து நாளிலேயே தனக்கு சொந்தமான யூடியூப் சேனலில் படத்தை வெளியிட்டார்.

படத்தை பார்க்க வேண்டும் என்றால் 89 ரூபாய் கட்டி படத்தை பார்க்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். வனிதாவின் யூடியூப் சேனலில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் இருப்பதால், இதன் மூலமாக சம்பாதித்துவிடலாம் என திட்டம் போட்டார் வனிதா, ஆனால், அந்த திட்டமும் சரியாக வொர்க் அவுட் ஆகாததால், தனது மகளில் பிறந்த நாள் அன்று மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை இலவசமாக யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். வனிதா தனது யூடியூபில் படத்தை ஓசியில் போட்டதுமே இரண்டு நாளிலேயே 1 மில்லியன் வீவர்ஸ் படத்தை பார்த்து கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தியேட்டரிலும் படம் ஓடல, யூடியூப்பில் பணம் கட்டியும் யாரும் பார்க்காததால், வாட்ச் ஹவர்சை அதிகரித்து யூடியூபில் அதன் மூலம் போட்ட பணத்தை வனிதா எடுக்க பக்காவாக பிளான் போட்டு உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X