நீ என்ன என் பாய்ஃபிரண்டா... கலாய்த்த விஜே.,வை தெறிக்க விட்ட வனிதா

சென்னை : சின்னத்திரையிலும் சரி, தமிழ் சினிமாவிலும் சரி வனிதா விஜயக்குமார் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை தான். அவர் என்ன செய்தாலும் அது ஹாட் டாக் ஆகி, வைரலாகி விடுகிறது.

பிரபல நடிகை, தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்ட வனிதா விஜயக்குமார் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்து கொண்டு டைட்டில் வின் பண்ணினார். பிக்பாஸை தொடர்ந்து விஜய் டிவி.,யில் நடத்தப்பட்ட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் வனிதா.

வெளியேறிய வனிதா

வெளியேறிய வனிதா

சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக கலந்து கொண்டு நடன திறமைகளை காட்டி வந்தார் வனிதா. ஆனால் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து மட்டுமல்ல, விஜய் டிவி.,யில் இருந்தும் வெளியேறினார் வனிதா.

லேடி தாதா கெட்அப்

லேடி தாதா கெட்அப்

இந்த பரபரப்புக்கள் அடங்குவதற்குள் வனிதாவிற்கு வரிசையாக பட வாய்ப்புகள் வர துவங்கி விட்டன. பிரஷாந்த் நடிக்கும் அந்தகன், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் பிக்அப் டிராப், வசந்தபாலன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் வனிதா. இதில் ஒரு படத்திற்காக லேடி தாதாவை போல் புடவை கட்டி, புல்லட் ஓட்டிய வீடியோ வெளியாகி வைரலானது.

பவர் ஸ்டாருடன் திருமணம்

பவர் ஸ்டாருடன் திருமணம்

சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பரபரப்பை ஏற்படுத்தினார் என்றால், சினிமாவில் வாய்ப்பு கிடைத்த பிறகும் பரபரப்பு குறையவில்லை. பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மணக்கோலத்தில் மாலை மாற்றி கொள்வது போன்ற ஃபோட்டோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாக்களில் அனல் பறக்க வைத்தார். பிறகு கழுத்தில் தாலியுடன் இருக்கும் ஃபோட்டோவையும் வெளியிட்டார்.

புஷ் ஆகி போன விவகாரம்

புஷ் ஆகி போன விவகாரம்

இதனால் வனிதா, பவர் ஸ்டாரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் என தகவல் பரவியது. ஆனால் பிறகு தான் தெரிந்தது. அது நிஜ கல்யாணம் இல்லை. பவர் ஸ்டார் சீனிவாசனே இயக்கி நடிக்கும் பிக்அப் டிராப் படத்திற்கான ஃபோட்டோஷுட் என்று. விஷயம் ஒன்றுமில்லாமல் புஸ் என்று ஆகி விட்டாலும் சிலர் அதை விடுவதாக இல்லை.

40 கல்யாணம் கூட பண்ணுவேன்

40 கல்யாணம் கூட பண்ணுவேன்

இந்த படத்தின் பிரஸ்மீட்டில் பவர் ஸ்டாருடன் எடுக்கப்பட்ட ஃபோட்டோ பற்றி சிலர் வனிதாவிடம் கேள்வி எழுப்பினர். இதனால் கடுப்பான வனிதா, 4 என்ன 40 கல்யாணம் கூட பண்ணுவேன். அது என் இஷ்டம் என கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

இது தான் கதையா

இது தான் கதையா

பவர் ஸ்டார் சீனிவாசனே இயக்கி, இசையமைத்து, நடிக்கும் பிக்அப் டிராப் படத்தில் லீட் ரோலில் வனிதா நடிக்கிறார். கதைப்படி வனிதாவின் மூன்றாவது கணவர் ரோலில் தான் பவர் ஸ்டார் நடிக்கிறார். இவர்கள் குடியேறியும் பங்களாவில் இருக்கும் பேய்களை சமாளித்து, அங்கிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பது தான் படத்தின் கதையாம்.

பிரியாணி ஓட்டலில் பிரபலங்கள்

பிரியாணி ஓட்டலில் பிரபலங்கள்

பவர் ஸ்டார் உடனான திருமணப் பரபரப்பு ஒரு புறம் போய் கொண்டிருக்க, சமீபத்தில் சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவிற்கு திரை பிரபலங்கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் வனிதாவும் ஒருவர். வனிதா, ரேஷ்மா பசுபலேட்டி, பூர்ணா, ஓவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் இருந்தா வர்ற

டெல்லியில் இருந்தா வர்ற

அப்போது அங்கு பேட்டி எடுக்க வந்த விஜே ஒருவர், வனிதாவை பார்த்ததும் பேச வார்த்தையே வரவில்லை என பேசி அவரை கலாய்த்தார். பதிலுக்கு வனிதாவும், என்ன நமஸ்தே...நீ என்ன டெல்லியில் இருந்தா வர்ற...வணக்கம்ன்னு சொல்லு போதும் என்று கலாய்த்தார்.

நீ என்ன என் பாய்ஃபிரண்டா

நீ என்ன என் பாய்ஃபிரண்டா

பிறகு அந்த விஜேவும், அருகில் இருந்த பூர்ணாவை பேட்டி எடுக்கலாமே என வனிதாவிடம் அனுமதி கேட்டார். இதனால் கடுப்பான வனிதா, நீ என்ன என் பாய் ஃபிரண்டா...மற்றவர்களிடம் நீ பேசினால் நான் பொறாமைப்படுவதற்கு என்றார். இதைக் கேட்ட அந்த விஜே உள்ளிட்ட அங்கிருந்த அனைவரும் அமைதியாக சிரித்தபடி போய் விட்டனர்.

கன்னித்தீவில் களமிறங்கிய வனிதா

கன்னித்தீவில் களமிறங்கிய வனிதா

விஜய் டிவி.,யில் இருந்து சமீபத்தில் வெளியேறிய வனிதா விஜயக்குமார், சமீபத்தில் கலர்ஸ் தமிழ் சேனலில் களமிறங்கி உள்ளார். கன்னித்தீவு என்ற காமெடி ஷோ மூலமாக தான் அங்கு என்ட்ரி கொடுத்துள்ளாராம் வனிதா. இதனால் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X