200 பவுன், இன்னோவா கார்.. ஜோவிகா திருமணத்திற்கு வனிதா போட்ட கண்டிஷன்!!!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், தன் மகள் ஜோவிகாவின் திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜோவிகா சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் நிலையில், அவரது திருமணம் குறித்து வனிதா பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தன் மகளை விமர்சனம் செய்யும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நகைச்சுவையாக அவர் கூறிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஒரு இன்னோவா கார் மற்றும் 200 பவுன் நகை கிடைத்தால் தன் மகள் ஜோவிகாவிற்கு திருமணம் செய்து வைப்பேன் என்று வனிதா கூறியதாக தெரிகிறது.
வனிதா விஜயகுமார் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது அவரது திரைப்படங்கள் மற்றும் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற பிரபலமான நிகழ்ச்சிகள் தான். இளம் வயதிலேயே தளபதி விஜய்யுடன் 'சந்திரலேகா' படத்தில் நடித்த இவர், பின்னர் 'மாணிக்கம்' என்ற படத்திலும் நடித்தார். பெரிய நடிகர் குடும்பத்தில் பிறந்தும், இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வனிதா விஜயகுமார் ஃபிளாஷ்பேக்: சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் இருக்க, அவரது தனிப்பட்ட வாழ்க்கை பல சர்ச்சைகளை சந்தித்தது. முதலில் சீரியல் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என இரு குழந்தைகள் உள்ளனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு, சொத்து பிரச்சனை, குடும்பத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு போன்ற பல விஷயங்கள் நடந்தன. இன்றும் விஜயகுமார் குடும்பத்தினருடன் இவருக்கு பெரிய அளவில் தொடர்பு இல்லை.
அதைத் தொடர்ந்து, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்தை வனிதா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜெயினிதா என்ற மகள் உள்ளார். ஆனால், இந்த திருமணமும் நீடிக்கவில்லை. மகன் ஸ்ரீஹரி தாத்தாவுடன் இருக்க, வனிதா தனது மகள்களான ஜோவிகா, ஜெயினிதாவுடன் வசித்து வருகிறார்.
'குக் வித் கோமாளி' தந்த ரீ-என்ட்ரி: ஒரு காலகட்டத்தில் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்த வனிதாவுக்கு, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ஒரு சூப்பர் ரீ-என்ட்ரியை கொடுத்தது. அந்த சீசனில் வெற்றி பெற்று மீண்டும் ரசிகர்களுக்கு நெருக்கமானார். அதன்பிறகு பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், பிக்பாஸ் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார்.
இதே சமயத்தில், அவரது மகள் ஜோவிகாவும் சினிமா துறைக்குள் நுழைந்தார். இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஜோவிகா, தற்போது தனது தாய் வனிதா இயக்கிய 'Mrs & Mr' படத்துக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளார். மகளின் இந்த வளர்ச்சி வனிதாவுக்கு பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இப்போ விஷயத்துக்கு வருவோம்: வனிதா பொதுவெளியில் பேசும்போதெல்லாம், பலர் அவரது மகள் ஜோவிகாவின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். "உங்கள் வாழ்க்கை போல் அவரது வாழ்க்கை ஆகிவிடக் கூடாது," என்றும், "அவளை இப்படி விட்டுவிடாதீர்கள்" என்றும் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் வனிதா, இந்த கமெண்ட்டுகள் குறித்து மிகவும் ஜாலியாகப் பேசினார். "என் மகள் மீது இவ்வளவு அக்கறை இருப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. ஆனால் ஒன்று, என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு சின்ன கண்டிஷன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
"என் மகளை திருமணம் செய்துகொள்ளும் நபர் 200 பவுன் நகையும், ஒரு இன்னோவா காரும் வாங்கித் தர வேண்டும்," என்று அவர் கூறினார். இதை அவர் மிகவும் சாதாரணமாக, நகைச்சுவையாக சொன்னாலும், இந்த கருத்தை சிலர் சமூக வலைத்தளங்களில் சீரியஸாக எடுத்துக்கொண்டு விவாதித்து வருகின்றனர். இருப்பினும், தன் மகளை விமர்சிப்பவர்களுக்கு வனிதா அளித்த ஒரு ஜாலியான பதிலாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வனிதாவின் இந்த பேச்சைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications











