»   »  முன்னாள் காதலர் விஷாலுக்கு வில்லியாகும் வரலட்சுமி சரத்குமார்?

முன்னாள் காதலர் விஷாலுக்கு வில்லியாகும் வரலட்சுமி சரத்குமார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லிங்குசாமி விஷாலை வைத்து இயக்கும் சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறாராம்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி படம் ஹிட்டானது. 12 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் லிங்குசாமி.


Varalakshmi to act in Sandakozhi 2

ஹீரோ விஷாலே, ஆனால் ஹீரோயின் மீரா இல்லை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் விஷாலின் முன்னாள் காதலியான வரலட்சுமி சரத்குமாரை லிங்குசாமி ஒப்பந்தம் செய்துள்ளாராம்.


வரலட்சுமி வில்லியாக நடிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வரலட்சுமி தற்போது தமிழ், மலையாள படங்களில் பிசியாக உள்ளார். விக்ரம் வேதா, நிபுணன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.


காதல் முறிந்த பிறகு வரலட்சுமியும், விஷாலும் சேர்ந்து நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Varalakshmi Sarathkumar is set to act in Vishal's upcoming movie Snadakozhi 2 to be directed by Lingusamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil