»   »  வரலெட்சுமி நடிக்கும் 'காட்டு'... அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸ்!

வரலெட்சுமி நடிக்கும் 'காட்டு'... அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு இந்த வருடம் படங்கள் வரிசைகட்டிக் கொண்டு வெளியாகின்றன. இன்னும் பல படங்கள் வெளியாக இருக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் வரலட்சுமி நடித்த 'விக்ரம் வேதா', 'நிபுணன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சிபிராஜுடன் இணைந்து நடித்துள்ள 'சத்யா' படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

varalakshmi's kaattu movie will be released on October 5th

இந்நிலையில் மலையாளத்தில் வரலட்சுமி நடித்துள்ள 'காட்டு' (காற்று) படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கடந்த வருடம் 'கசபா' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகிலும் கால் பதித்தார் வரலட்சுமி.

சில வருடங்களாக நல்ல வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்த வரலட்சுமிக்கு மலையாளத்தில் அடித்திருக்கிறது அதிர்ஷ்டம். தற்போது மம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அதற்கு முன்பே அவர் நடித்த 'காட்டு' படம்தான் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.

இந்தப்படத்தை அருண்குமார் அரவிந்த் என்பவர் இயக்குகிறார். நடிகரும் காதாசிரியருமான முரளிகோபி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்தப்படத்தில் முத்துலட்சுமி என்கிற தைரியமான தமிழ்ப்பெண் கேரக்டரில் நடித்திருக்கிறாராம் வரலட்சுமி.

English summary
Actress Varalakshmi made her debut in the Malayalam film industry by starring with Mammootty in 'Kasaba'. Varalakshmi's 'kaattu' movie will be released on October 5th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil