»   »  விஷால் திருமணம்னு சொன்னாரு, இந்த வரலட்சுமி என்ன இப்படி பேசுறாங்க?

விஷால் திருமணம்னு சொன்னாரு, இந்த வரலட்சுமி என்ன இப்படி பேசுறாங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலித்து வருவதாக கடந்த மூன்று ஆண்டுகளாக பேசப்படுகிறது. அவர்களும் எல்லாவற்றையும் காதில் வாங்கியும் வாங்காதவாறும் ஜோடி போட்டு பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள்.

இந்த காதல் விவகாரத்தால் தான் சரத்குமாருக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் என்று கூறப்படுகிறது.

வரலட்சுமி

வரலட்சுமி

வரலட்சுமி விஷாலுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். சில நேரங்களில் விஷால் படம் வரைவது, வண்ணம் தீட்டுவதை எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

திருமணம்

திருமணம்

எல்லாம் சரிப்பா, இந்த விஷாலும், வரலட்சுமியும் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்று கோலிவுட்டில் பேசிக் கொண்டனர். ரசிகர்களும் விஷாலின் திருமண அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்தனர்.

விஷால்

விஷால்

அண்மையில் பேட்டி ஒன்றில் விஷால் கூறுகையில், வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன் என்று தெரிவித்தார்.

திருமணமா?

விஷால் அப்படி அறிவித்துள்ள நிலையில் வரலட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, டியர் மீடியா நண்பர்களே... நான் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போவது இல்லை. நான் என் வேலையை திருமணம் செய்துள்ளேன். அதனால் எனது திருமணத்தை பற்றி எழுதுவதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள். மேசமான பத்திரிகை தர்மம் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Varalakshmi Sarathkumar tweeted that, 'Dear media friends..IM NOT GETTING MARRIED any time soon..I'm married to my work. So plz stop writing about my wedding..It's bad journalism'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil