Just In
- 29 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 36 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 44 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
Don't Miss!
- News
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு... கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாமே... ஆய்வு சொல்கிறது!
- Sports
"இங்க வாங்க லைன்".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்!
- Education
டிப்ளமோ முடித்தவரா நீங்க? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதினு தெரியும்.. ‘மக்கள் செல்வி’ யாருனு தெரியுமா மக்களே?

சென்னை: பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரலட்சுமி சரத்குமாருக்கு 'மக்கள் செல்வி' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சினிமாவில் நடிப்பதைத் தாண்டியும் சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார். அரசியலைக் கற்றுக் கொண்டு அதில் இறங்கும் திட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார் வரலட்சுமி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'டேனி' படத்தின் போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு.
அதெப்படி வரலட்சுமிக்கு 'அந்த'ப் பட்டத்தைக் கொடுக்கலாம்.. கொதித்தெழுந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்!

போலீசாக வரலட்சுமி:
வரலக்ஷ்மி போலீசாக நடிக்கும் இப்படத்தினை சந்தான மூர்த்தி இயக்குகிறார். இந்த போஸ்டர்களை நடிகர் ‘ஜெயம்' ரவி வெளியிட்டார். அதில் வரலக்ஷ்மிக்கு ‘மக்கள் செல்வி' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் செல்வி:
போஸ்டரை வெளியிட்டதற்காக ஜெயம் ரவிக்கு நன்றி தெரிவித்த வரலட்சுமி, அதில் தனக்கு மக்கள் செல்வி பட்டம் கொடுக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்துள்ளார். திரைத்துறையினரும் வரலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு, மக்கள் செல்வி பட்டத்திற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, நடிகர் விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கதாபாத்திரங்கள்:
நாயகியாக அறிமுகமானபோதும், சர்கார், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் வரலட்சுமி வில்லியாக நடித்திருந்தார். அப்படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து வில்லி மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அவர்.
|
கை நிறைய படங்கள்:
மாரி 2 படத்தைத் தொடர்ந்து, கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு மற்றும் டேனி என 10க்கும் மேற்பட்ட படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார். மேலும், தெலுங்கிலும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.