நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும்“சரஸ்வதி”.. தயாரிப்பாளராகவும் மாறிட்டாரே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இயக்குநராக உள்ள நிலையில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இயக்குநராக மாறியுள்ளார். மேலும், புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில், தனது முதல் படத்தை இயக்கவுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் கிளாமர் ஹீரோயினாக நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார் துணை நடிகையாகவும் வில்லியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

Varalaxmi Sarathkumar turns Director and Producer with her next movie Saraswathi
Photo Credit:

கடந்த ஆண்டு நிக்கோலாய் சச்தேவ் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி சரத்குமார் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இயக்குநராகவும் மாறியுள்ளார்.

மத கஜ ராஜா செம ஹிட்: வரலட்சுமி சரத்குமார் 12 ஆண்டுக்கு முன்னர் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் உடன் இணைந்து கவர்ச்சி பொங்க நடித்த மத கஜ ராஜா படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றி பெற்றது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பல புதிய படங்களே பல்பு வாங்கிய நிலையில், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலியின் கிளாமர் காட்சிகள் மற்றும் சந்தானத்தின் டபுள் மீனிங் காமெடிகளுடன் வெளியான விஷால் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்த்து.

தயாரிப்பு நிறுவனம் பெயரே நல்லா இருக்கே: நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்கு துணை நடிகையாக நடிக்க முடியாது என்கிற முடிவை எடுத்த வரலட்சுமி சரத்குமார் தற்போது அடுத்த லெவலுக்கு முன்னேறியிருக்கிறார்.

இயக்குநரான வரலட்சுமி சரத்குமார்: இந்த சிறப்பான துவக்கத்தில்,"சரஸ்வதி" என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். முன்னனி இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெங்கட் ராஜன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சுதீர் மச்சர்லா கவனித்துக் கொள்கிறார். தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தை இயக்கி ஹீரோயினாக நடிக்கவுள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X