Just In
- 13 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 40 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விளையாட்டா நினைக்காதீங்க.. நமக்கு பரவாதுன்னு சுத்தாதீங்க.. வரலக்ஷ்மி சரத்குமார் எச்சரிக்கை!
சென்னை: கொரோனா வைரஸ் இந்தியாவில் படுவேகமாக பரவி வருகிறது. மக்கள் அதனை விளையாட்டாக நினைத்து, அசால்ட்டாக இருக்க வேண்டாம் என நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5பேர் இந்த கொடிய நோயால் உயிர் இழந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெறும் நூற்றுக்கணக்கில் இருந்த கொரோனா தொற்று, தற்போது 300ஐ எட்டியிருப்பது மிகவும் மோசமான விஷயம், அதே நேரத்தில், பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் சுய எச்சரிக்கையுடனும் இருப்பது இந்த நேரத்தின் மிக முக்கியமான விஷயம்.
நாளை ஒருநாள் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ள சுய ஊரடங்கு உத்தரவு, #JanathaCurfew என்று டிரெண்டாகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராஜமவுலி உள்ளிட்ட பல பிரபலங்களும், இதற்கு பொதுமக்களின் முழு ஆதரவு வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்ற மருத்துவர்களின் அறிவுரைகள், பிரபலங்களின் வீடியோக்கள் என பல விழிப்புணர்வுகளையும் கேட்டுக் கொண்டு இருக்கீங்க, மக்களாகிய நீங்க என்ன செய்யப் போறீங்க, உங்களுக்கு வராதுன்னு அலட்சியமாகவோ, விளையாட்டாகவோ கொரோனாவை நினைத்து முட்டாள் தனமான காரியங்களை செய்ய வேண்டாம்.
அறிவுரைகளை மதித்து, தனிமைப்படுத்தி இருத்தல் மற்றும், தவறாமல் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமே கொரோனாவை அண்ட விடாமல் தவிக்கும் மருந்து, பத்திரமாக இருங்கள் என ட்வீட் போட்டு, கடைசி எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்.
There's enough information, celebrity videos,doctor videos,whtsapp msgs on #COVID19outbreak how we are going to behave n handle this is what counts.Dont think u won't get it n act stupid #SocialDistancing #WashYourHands is the only medicine we have against this..Be smart..Be Safe pic.twitter.com/IWxDC5WCVM
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) March 21, 2020
நாளை ஞாயிற்றுக் கிழமை என்பதால், பொதுமக்கள் ஊர் சுற்றாமல், கடற்கரைகளுக்கு செல்லாமல் இருக்க, அனைத்து கடற்கரைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும், இந்த நேரத்தில், தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும், வீண் வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் தேவையற்ற அச்சம் மனரீதியான பிரச்சனைகளில் கொண்டு போய் சேர்க்கும், அதனால், பாதுகாப்புடன் இருப்போம்.