»   »  தமன்னா, டாப்ஸி, ஸ்ரேயா இவங்கள்லாம் சைடுல என்ன பண்றாங்க தெரியுமா?

தமன்னா, டாப்ஸி, ஸ்ரேயா இவங்கள்லாம் சைடுல என்ன பண்றாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் நடிகைகளின் கேரியர் என்பது ரொம்பவே சுருங்கிவிட்டது. மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. அதற்குள் சினிமாவில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்து செட்டில் ஆகிவிட வேண்டும்.

இதற்கு நடிகைகள் தேர்ந்தெடுப்பது பார்ட் டைம் பிசினஸ்... சினிமாவில் தங்களுக்கு இருக்கும் தொடர்புகள், புகழ் ஆகியவற்றை தங்களது பிசினஸ்களுக்கும் பயன்படுத்தி பிசினஸிலும் கொடிகட்டி பறக்கும் சில நடிகைகளின் விவரங்கள்...

தமன்னா

தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் இப்போதுகூட விஷாலுடன் கத்திச்சண்டையில் நடித்திருக்கிறார். இவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் ஒரு நகைக்கடை ஆரம்பித்து பிஸினஸிலும் பிஸியாக இருக்கிறார். விட் அண்ட் கோல்ட் என்ற இந்த ஜுவல்லரி முழுக்க முழுக்க ஆன்லைன் ஜுவல்லரி. இந்த கடையின் க்ரியேட்டிவ் டிசைனர் தமன்னாதான்.

ஆர்டர் தந்தால் அவரே டிசைன் பண்ணி நமக்கு அனுப்பி வைப்பார். தங்கம் மட்டும் தான் கிடைக்கும் என்பதால் வலுவான பர்ஸ் இருப்பவர்கள் ஆர்டர் செய்யவும்.

ரகுல்ப்ரீத்சிங்

ரகுல்ப்ரீத்சிங்

தமிழில் சோபிக்காவிட்டாலும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாகிவிட்ட ரகுல்ப்ரீத் சிங் ஆரம்பித்திருப்பது ஒரு ஃபிட்னஸ் ஸ்டூடியோவை. அதாவது ஜிம். எஃப் 45 என்ற இந்த ஃபிட்னஸ் ஸ்டூடியோ அமைந்திருப்பது ஹைதராபாத்தில் இருக்கும் கச்சிபௌலி பகுதியில். விசிட்டர்களுக்கு நேரடியாகவே ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்து கவர்கிறார் ரகுல்.

டாப்ஸி பன்னு

டாப்ஸி பன்னு

பின்க் படம் மூலம் மீண்டும் சினிமாவில் ஃபார்முக்கு வந்திருக்கும் டாப்ஸி ஆக்சுவலி ஒரு இஞ்சினியர். தன் தங்கை சகுன் பன்னு, நண்பர் ஃபாரா பர்வேஸ் ஆகியோருடன் இணைந்து 'த வெட்டிங் ஃபேக்டரி' என்ற கம்பெனி நட்த்துகிறார். இதன் வேலை திருமணங்களை சீரும் சிறப்புமாக நட்த்தி வைப்பது. பிரம்மாண்டமாகவும், க்ரியேட்டிவ்வாகவும் நமது திருமணங்களை நடத்தி தருவார்கள். சார்ஜ் தான் கொஞ்சம் அதிகமாகும்.

நிஷா அகர்வால்

நிஷா அகர்வால்

நம்ம காஜல் அகர்வாலின் தங்கை. உன்னாலே உன்னாலே படத்தில் தன் குறும்பு நடிப்பால் நம்மை கவர்ந்த நிஷா அகர்வால் தன் அக்கா உதவியோடு ஒரு ஜுவல்லரி தொடங்கியிருக்கிறார். தொடக்க விழாவையே மும்பையில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடத்தி அசத்தினார்.

ப்ரணிதா

ப்ரணிதா

சகுனி ப்ரணிதாவேதான். சூர்யாவின் மாஸ் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் பெங்களூரில் ஒரு ஹோட்டல் தொடங்கியிருக்கிறார். பூட்லெக்கர் என்ற அந்த ஹோட்டலில் நம்மூர் ஐட்டங்கள் மட்டும் அல்லாது மெக்ஸிகன் ஐட்டங்களும் கிடைக்குமாம்.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

மற்றவர்கள் எல்லாம் லாபத்தை நோக்கமாக கொண்டு பிசினஸில் ஈடுபட்டாலும் இவர் மட்டும் வித்தியாசமாக சேவையை நோக்கமாக கொண்டு ஒரு ஸ்பா ஆரம்பித்திருக்கிறார். ஸ்ரீ என்ற இவரது ஸ்பாவில் தலை, முதுகு, உடல், கால் என அனைத்து உடல் பாகங்களுக்கும் மஸாஜ் செய்கிறார்கள்.

இதில் என்ன சேவை என்கிறீர்களா? ஸ்ரேயாவின் ஸ்பாவில் வேலை செய்பவர்கள் அனைவருமே மாற்றுத்திறனாளிகளாம்.

ஸ்ரேயா மேடம் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு!

English summary
Here is the list of actresses who are doing various side businesses apart from acting.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil