»   »  வேதாளத்திற்காக தீபாவளி வரை காத்திருக்க முடியாது - நயன்தாரா

வேதாளத்திற்காக தீபாவளி வரை காத்திருக்க முடியாது - நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்திற்காக தன்னால் தீபாவளி வரை காத்திருக்க முடியாது என்று நடிகை நயன்தாரா தெரிவித்திருக்கிறார்.நேற்று நள்ளிரவில் வேதாளம் படத்தின் வீர விநாயகா டீசர் வெளியானது.

விநாயகர் பாடலுக்கு அஜீத் ஆடும் இந்தப் பாடலின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலில் அஜீத், லட்சுமி மேனனுடன் இணைந்து ஆடியிருக்கிறார்.

இந்த டீசரைப் பார்த்த நயன்தாரா வீர விநாயகா டீசர் கலர்புல்லாக இருக்கிறது, என்னால் தீபாவளி வரை காத்திருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

வீர விநாயகா

வீர விநாயகா

வீர விநாயகா வெற்றி விநாயகா என்று வேதாளம் படத்தில் இடம்பெறும் விநாயகர் பாடலின் டீசரானது நேற்று நள்ளிரவில் இணையத்தில் வெளியானது. விநாயகர் சிலைக்கு முன்னர் லட்சுமி மேனனும், அஜித்தும் ஆடிப் பாடுவது போன்று இந்த டீசர் உள்ளது. அனிருத்தின் இசையில் வெளியான இந்த டீசர் ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பைப் பெற்று வருகிறது.

நயன்தாரா

ரசிகர்களை மட்டுமன்று ஹாட்ரிக் நாயகியான நயன்தாராவையும் இந்தப் பாடலின் டீசர் கவர்ந்திருக்கிறது. டீசர் குறித்து அவர் கூறும்போது " வீர விநாயகா டீசர் லுக் சூப்பர். கலர்புல் மற்றும் பவர்புல்லாக இருக்கும் இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. தீபாவளி வரை என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இது நம்ம ஆளு

தான் நடித்திருக்கும் இது நம்ம ஆளு படத்தின் சிடி கவரை வெளியிட்டு இருக்கும் நயன்தாரா "படத்தின் இசை விரைவில் வெளியாகும், தேதியை தயாரிப்பாளர் அறிவிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் குறித்து கேட்டபோது நோ கமெண்ட்ஸ் என்று கூறிய நயன் தொடர்ந்து மீடியாக்கள் எப்போதும் நடிகர்களின் சொந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் நாங்கள் பொழுதுபோக்கு சார்ந்த துறையில் இருப்பதால் தான். ஆனால் எங்கள் சொந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு அல்ல.

பதில் கூறமுடியாது

பதில் கூறமுடியாது

மீடியாக்கள் என் சொந்த வாழ்க்கை குறித்து முக்கியத்துவம் கொடுத்து எழுதினாலோ, பேசினாலோ கண்டிப்பாக நான் அதற்கு பதிலோ, கருத்தோ ஏதும் தர இயலாது.காரணம் எனது சொந்த வாழ்க்கைக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். என்னைப் பொருத்தவரை வேலையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நல்ல படங்கள் தேர்வு செய்யவும் முயன்று வருகிறேன் எனக் கூறியுள்ளார் நயன்தாரா.

English summary
Actress Nayanthara Says "Veera Vinayaga Teaser looks super #Powerful & #Colorful Can't wait for Diwali #ThalaMass".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil