»   »  சிம்பு வலையில் வேதிகா!

சிம்பு வலையில் வேதிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேதிகாவுக்கு கெட்ட நேரமா அல்லது சிம்புவுக்கு நல்ல நேரமா என்று தெரியவில்லை. சிம்புவைப் புகழ்ந்து பேச ஆரம்பித்துள்ளாராம் அவருடன் காள படத்தில் ஜோடி போடப் போகும் வேதிகா.

வல்லவனுக்குப் பிறகு சிம்பு இரு படங்களில் நடிக்கவுள்ளார். கெட்டவன் மற்றும் காள ஆகியவையே அப்படங்கள். இதில் காள படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளும் (திரிஷா கூட முடியாதுன்னு சொல்லிட்டார்!) மறுத்து விட்டதால், கடைசியல் அமைந்தவர்தான் வேதிகா.

முனி படத்தில் மும்முரமாக கிளாமர் காட்டி கலக்கியிருந்தார் வேதிகா. அவரது ஸ்டைலும், கிளாமரும் சிம்புவுக்குப் பிடித்துப் போக அவரை அணுகினார். வேதிகாவும் உடனே ஓகே சொல்லி விட்டார்.

படத்தில் நடிக்க புக் ஆன அடுத்த நிமிடத்திலிருந்து சிம்புவைப் புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார் வேதிகா.

சிம்பு குறித்து வேதிகா கூறுகையில், சிம்பு அசாதாரணமான ஆள். அவரைப் போன்ற திறமையுடைய ஒரு நடிகருடன் நடிக்க எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

சிறந்த நடிகராக சிறு வயதிலேயே பெயரெடுத்தவர் சிம்பு. அவரது வளர்ச்சியை தமிழகமே வியந்து பார்த்து வருகிறது. குறிப்பாக மன்மதன், வல்லவனுக்குப் பிறகு அவரது நிலை வெகுவாக உயர்ந்து விட்டது.

வல்லவன் படத்தில் இடம் பெற்ற லூசுப் பெண்ணே பாட்டை அவர் படமாக்கியிருந்த விதத்தைப் பார்த்து நான் ஆஃப் ஆகி விட்டேன். சிம்ப்ளி சூப்பர்ப்.

அவரைப் பற்றி வரும் வதந்திகள், செய்திகள் குறித்து எனக்குக் கவலை இல்லை. ஒரு கலைஞராக தனது ஜோடியாக என்னை செலக்ட் செய்ததற்காக அவரை நான் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன் என்று புளகாங்கிதப்பட்டு, புல்லரித்துப் போய்க் கூறியுள்ளார் வேதிகா.

இப்படித்தான் வல்லவன் படத்திற்காக நயனாராவை சிம்பு புக் பண்ணியபோது அவரைப் புகழ்ந்து தள்ளினார் நயனதாரா. பின்னர் நடந்ததுதான் தெரியுமே.

வேதிகா விஷயத்தில் என்ன நடக்குமா, நடக்கப் போகிறதோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil