»   »  ரித்திகா சிங் மீது கோபத்தில் இருக்கும் ஹன்சிகா, வேதிகா!

ரித்திகா சிங் மீது கோபத்தில் இருக்கும் ஹன்சிகா, வேதிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் இப்போது எல்லோருடைய பார்வையும் ரித்திகா சிங் மீதுதான். இறுதிசுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் ரித்திகா.

இப்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்துவரும் ரித்திகாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வருகின்றன.

Vedhika and Hansika fury on Rithika

முதலில் செலக்டிவா தான் நடிப்பேன் என சொன்ன ரித்திகாவும் இப்போது காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ஃபார்முலாவுக்கு மாறிவிட்டார்.

ஆமாம், பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் சிவலிங்கா படத்தில் லாரன்ஸுக்கு ஜோடி ரித்திகா தான். ரித்திகா நடிக்கும் ரோலில் கன்னடத்தில் நடித்தவர் வேதிகா. ரித்திகா வேடத்துக்கு முதலில் பேசப்பட்டது ஹன்சிகா. இருவருக்கும் கையில் பெரிய படங்கள் இல்லை. கோபம் வராதா பின்னே?

English summary
Actresses Hansika and Vedhika are fury on actress Rithika who replaced the previous actresses in Sivalinga Tamil remake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil