»   »  பாட்டியும் நானே... பேத்தியும் நானே... வினோதனில் 60 வயதுப் பெண்ணாக நடிக்கும் வேதிகா

பாட்டியும் நானே... பேத்தியும் நானே... வினோதனில் 60 வயதுப் பெண்ணாக நடிக்கும் வேதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபுதேவா தயாரிப்பில் விக்டர் ஜெயராஜ் இயக்கவுள்ள வினோதன் படத்தில் நடிகை வேதிகா இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒன்று 60 வயது பாட்டி கதாபாத்திரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரதேசி, காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்தவர் வேதிகா. இவர் தற்போது பிரபுதேவா தயாரிப்பில் உருவாகும் வினோதன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருண் நாயகனாக நடிக்கிறார். விக்டர் ஜெயராஜ் இப்படத்தை இயக்குகிறார்.

பாட்டியும், பேத்தியும்...

பாட்டியும், பேத்தியும்...

இந்தப் படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் வேதிகா. அதில் ஒன்று பள்ளி மாணவி என்றும், மற்றொன்று 60 வயது பாட்டி கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

சுகன்யா மாதிரி...

சுகன்யா மாதிரி...

ஏற்கனவே இந்தியன் படத்தில் குறைந்த வயது மற்றும் வயதான பாட்டி வேடத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர் சுகன்யா. அதேபோல், இந்தப் படத்தில் வேதிகாவின் நடிப்பும் பேசப்படும் என படக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டபுள் ஹேப்பி...

டபுள் ஹேப்பி...

பிரபுதேவா தயாரிப்பில் நடிப்பது, கூடவே இரட்டை வேடம் என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் வேதிகா. நிச்சயமாக இந்தப் படம் மீண்டும் தன்னைத் தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறாராம்.

விரைவில் ஷூட்டிங்...

விரைவில் ஷூட்டிங்...

சைக்கலாஜிக்கல் ரொமான்டிக் திரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
We had recently reported that Vedhika is a part of debutant director Victor Jayaraj's film, Vinodhan, which is produced by Prabhu Deva. Now, we hear that the actress will be playing a 60-year-old woman in some segments of the film, which is a psychological romantic drama.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil