»   »  வேதிகாவின் பே ஹைக்

வேதிகாவின் பே ஹைக்

Subscribe to Oneindia Tamil

நடித்த ஒத்தப் படமான முனி சுமாராக ஓடினாலும் ஓடியது, தனது சம்பளத்தை டக்கென்று உயர்த்தி விட்டாராம் வேதிகா.

பார்ப்பவர் மனதில் மோக முள்ளால் நச் நச்சென்று குத்தும் அளவுக்கு திவ்ய தேகத்துடன் கோலிவுட்டுக்குள் நுழைந்துள்ள வேதிகா, முனி படத்தில் லாரன்ஸ் ராகவேந்திராவுக்கு ஜோடியாக நடித்தார்.

இப்போது சிம்புவுடன் ஜோடி போட்டு நடிக்கவும் உள்ளார். இந்த நிலையில் திடீரென தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம் வேதிகா.

முனி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் டப் ஆகியது. இரு மொழிகளிலும் படம் சுமாராக ஓடியதால் வேதிகா கவனிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் வல்லிய அழகுடன் இருப்பதாலும், வாகாக ஆடுவதாலும், ேவதிகாவுக்கு கொஞ்சம் போல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தயாரிப்பாளர்கள் வேதிகா வீட்டு பக்கம் ரோந்து போக ஆரம்பித்துள்ளனர்.

மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பிப்பதை உணர்ந்த வேதிகாவும், காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப சம்பளத்தை ஏற்றி விட்டாராம்.

முதல் படத்தில் 5 வரை (பெரிய 5) மட்டுமே வாங்கினார். ஆனால் இப்போது அதை இரு மடங்காக உயர்த்தி விட்டாராம். அடுத்த படம் ஓடி விட்டால் அதுவும் டபுள் ஆகி விடுமாம்.

இதுதவிர படத்தில் குத்துப் பாட்டு வைத்தால் அதற்கு தனியாக மீட்டர் போட்டு விடுகிறாராம்.

வளரும் பருவத்திலேயே இவ்வளவு வம்பு பண்ணுதே இந்தப் பொண்ணு என்று கேட்டு கட்டுப்படியாகாத சில தயாரிப்பாளர்கள் தனியாக புலம்பிக் கொண்டுள்ளனராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil