twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஜாலா, வேதிகா, ஹாரிகா அர்ஜூனின் வழக்கமான பார்மூலாப்படி அவரது அடுத்த படமான மதராஸியின் அவருக்கு மூன்று ஜோடிகளாம்.கோலிவுட் பள்ளிக் கூடத்தில் விஜய்காந்த், சத்யராஜ் ஆகியோரின் வரிசையில் உட்கார்ந்திருப்பவர் அர்ஜூன். இவர்களுக்கு ஒருஹீரோயின் எல்லாம் பத்தவே பத்தாது. குறைந்தபட்சம் 2 பேர் வேண்டும்.அடுத்தவர் படம் என்றால் சொன்னபடி நடிக்கும் அர்ஜூன், தான் சொந்தப் படம் எடுத்து இயக்கும்போது தெலுங்குப் படம்மாதிரியே ஓவர் ஆக்ஷன், செக்ஸ் கலந்து தருவார்.கையில் வெளிப் படம் ஏதும் இல்லாதபோது டபக்கென துண்டை விரித்து தானே ஒரு படத்தை இயக்க ஆரம்பிவித்துவிடுவார்.அந்த வகையில் அர்ஜூன் தானே இயக்கி, நடிக்கும் படம் மதராஸி.மும்பை அண்டர்வோர்ல்ட் தாதாக்களுடன் மதராஸி ஒருவர் மோதும் கதையாம்.இதில் அர்ஜூனுக்கு இரண்டல்ல.. மூன்று ஹீரோயின்கள். கஜாலா, ஹாரிகா, வேதிகா என்று மூன்று பேருடன் களத்தில்இறங்கியிருக்கிறார் அர்ஜூன் சர்ஜா (இது தான் அவரது ஒரிஜினல் பெயர்).கூடவே குத்து படத்தில் நடித்த கர்நாடகத்தைச் சேர்ந்த ரம்யாவும் நடிக்கிறார். இதில் வேதிகாவுக்கும் அர்ஜூனைப் போலவேசொந்த ஊர் கர்நாடகம் தான். மும்பையில் செட்டில் ஆகி மாடலிங் செய்து கொண்டிருந்தவர் தெலுங்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரை இப்போது தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வருகிறார் அர்ஜூன்.இதில் நடிக்கும் ஹாரிகா ஆந்திராவைச் சேர்ந்தவர். சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தவர் அதைவிட்டுவிட்டு தெலுங்கில் ஒருகரம் மசாலா படத்தில் நடித்தார். அதுவே தமிழில் அறியாத பசங்க என்ற பெயரில் உருவாகிறது. அதிலும் இவரே நாயகி.இப்போது அர்ஜூனின் படத்திலும் கவர்ச்சி காட்டி சான்ஸ் அடித்திருக்கிறது.இவர்கள் தவிர நடிப்புக்காக சேர்க்கப்பட்டிருப்பவர் தான் கஜாலா. ராம் படத்தில் இவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததால், நல்லஸ்கோப் இருக்கும் பாத்திரங்களைத் தான் ஏற்று வருகிறார். இதிலும் கிளாமரோடு நடிப்புக்கும் வாய்ப்பு இருக்கிறதாம்.படத்தின் பர்ஸ்ட் ஷெட்யூல் மும்பையில் 15 நாட்கள் நடந்ததாம். அடுத்தகட்ட சூட்டிங், அதாங்க, பாடல் காட்சிகள் எடுப்பதுலண்டனில் நடந்து முடிந்துள்ளது. லண்டனில் லங்காஸ்டர், பிளாக்பூல், பிரெஸ்டன் என கண்ணுக்கு விருந்து படைக்கும்ஏரியாக்களில் பாடல்களை எடுத்துள்ளார்களாம்.இப்போது ஹைதராபாத்தில் சூட்டிங் வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.ஜோக்குக்கு விவேக், வில்லத்தனம் செய்ய நிர்மல் பாண்டே, முகேஷ் திவாரி, விமல்ராஜ், மாறன், சந்தோஷ் பவன் என்றதமிழுக்குப் புதுமுகங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அர்ஜூனின் நண்பரும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனுமான ஜெகபதிபாபு ஒரு முக்கிய ரோலில் வருகிறாராம். படத்தைதெலுங்கில் டப் செய்து விடும் முடிவில் இருக்கும் அர்ஜூன், அதற்காககே ஜெகபதிபாபுவையும் பிடித்துப் போட்டுள்ளாராம்.நடனத்தை ராஜு சுந்தரம், ஷோபா ஆகியோர் கவனிக்க, இசையமைக்கிறார் இமான். படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிஇயக்குவது அர்ஜூன். ஆனால், வசனத்தை இவர் எழுதவில்லை. காரணம், தமிழில் அவருக்கு உள்ள கமாண்ட் அப்படி.

    By Staff
    |

    அர்ஜூனின் வழக்கமான பார்மூலாப்படி அவரது அடுத்த படமான மதராஸியின் அவருக்கு மூன்று ஜோடிகளாம்.

    கோலிவுட் பள்ளிக் கூடத்தில் விஜய்காந்த், சத்யராஜ் ஆகியோரின் வரிசையில் உட்கார்ந்திருப்பவர் அர்ஜூன். இவர்களுக்கு ஒருஹீரோயின் எல்லாம் பத்தவே பத்தாது. குறைந்தபட்சம் 2 பேர் வேண்டும்.

    அடுத்தவர் படம் என்றால் சொன்னபடி நடிக்கும் அர்ஜூன், தான் சொந்தப் படம் எடுத்து இயக்கும்போது தெலுங்குப் படம்மாதிரியே ஓவர் ஆக்ஷன், செக்ஸ் கலந்து தருவார்.

    கையில் வெளிப் படம் ஏதும் இல்லாதபோது டபக்கென துண்டை விரித்து தானே ஒரு படத்தை இயக்க ஆரம்பிவித்துவிடுவார்.அந்த வகையில் அர்ஜூன் தானே இயக்கி, நடிக்கும் படம் மதராஸி.


    மும்பை அண்டர்வோர்ல்ட் தாதாக்களுடன் மதராஸி ஒருவர் மோதும் கதையாம்.

    இதில் அர்ஜூனுக்கு இரண்டல்ல.. மூன்று ஹீரோயின்கள். கஜாலா, ஹாரிகா, வேதிகா என்று மூன்று பேருடன் களத்தில்இறங்கியிருக்கிறார் அர்ஜூன் சர்ஜா (இது தான் அவரது ஒரிஜினல் பெயர்).

    கூடவே குத்து படத்தில் நடித்த கர்நாடகத்தைச் சேர்ந்த ரம்யாவும் நடிக்கிறார். இதில் வேதிகாவுக்கும் அர்ஜூனைப் போலவேசொந்த ஊர் கர்நாடகம் தான். மும்பையில் செட்டில் ஆகி மாடலிங் செய்து கொண்டிருந்தவர் தெலுங்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரை இப்போது தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வருகிறார் அர்ஜூன்.


    இதில் நடிக்கும் ஹாரிகா ஆந்திராவைச் சேர்ந்தவர். சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தவர் அதைவிட்டுவிட்டு தெலுங்கில் ஒருகரம் மசாலா படத்தில் நடித்தார். அதுவே தமிழில் அறியாத பசங்க என்ற பெயரில் உருவாகிறது. அதிலும் இவரே நாயகி.இப்போது அர்ஜூனின் படத்திலும் கவர்ச்சி காட்டி சான்ஸ் அடித்திருக்கிறது.

    இவர்கள் தவிர நடிப்புக்காக சேர்க்கப்பட்டிருப்பவர் தான் கஜாலா. ராம் படத்தில் இவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததால், நல்லஸ்கோப் இருக்கும் பாத்திரங்களைத் தான் ஏற்று வருகிறார். இதிலும் கிளாமரோடு நடிப்புக்கும் வாய்ப்பு இருக்கிறதாம்.

    படத்தின் பர்ஸ்ட் ஷெட்யூல் மும்பையில் 15 நாட்கள் நடந்ததாம். அடுத்தகட்ட சூட்டிங், அதாங்க, பாடல் காட்சிகள் எடுப்பதுலண்டனில் நடந்து முடிந்துள்ளது. லண்டனில் லங்காஸ்டர், பிளாக்பூல், பிரெஸ்டன் என கண்ணுக்கு விருந்து படைக்கும்ஏரியாக்களில் பாடல்களை எடுத்துள்ளார்களாம்.

    இப்போது ஹைதராபாத்தில் சூட்டிங் வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.


    ஜோக்குக்கு விவேக், வில்லத்தனம் செய்ய நிர்மல் பாண்டே, முகேஷ் திவாரி, விமல்ராஜ், மாறன், சந்தோஷ் பவன் என்றதமிழுக்குப் புதுமுகங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அர்ஜூனின் நண்பரும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனுமான ஜெகபதிபாபு ஒரு முக்கிய ரோலில் வருகிறாராம். படத்தைதெலுங்கில் டப் செய்து விடும் முடிவில் இருக்கும் அர்ஜூன், அதற்காககே ஜெகபதிபாபுவையும் பிடித்துப் போட்டுள்ளாராம்.

    நடனத்தை ராஜு சுந்தரம், ஷோபா ஆகியோர் கவனிக்க, இசையமைக்கிறார் இமான். படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிஇயக்குவது அர்ஜூன். ஆனால், வசனத்தை இவர் எழுதவில்லை. காரணம், தமிழில் அவருக்கு உள்ள கமாண்ட் அப்படி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X