»   »  இப்படியெல்லாமா பப்ளிசிட்டி தேடுவீங்க வீணாம்மா?

இப்படியெல்லாமா பப்ளிசிட்டி தேடுவீங்க வீணாம்மா?

By Sudha
Subscribe to Oneindia Tamil

பப்ளிசிட்டி தேடுவதையே ஒரு தொழிலாக வைத்துள்ளார்கள் பலரும். நம்ம ஊரில் பவர் ஸ்டார்.. பாலிவுட்டில் வீணா மாலிக்.

வீணா மாலிக் எது செய்தாலும் அது பப்ளிசிட்டி ஸ்டண்ட் ஆகவே இருக்கிறது. அவர் நடித்து இதுவரை ஒரு படம் கூட திரையைப் பார்த்ததில்லை. ஆனால் அவர் கொடுக்கும் பில்டப்புகளும், செய்யும் வேலைகளும் ரொம்பவே டென்ஷனாக்குகிறது.

ஏப்ரல் 1ம் தேதி எல்லோரும் எல்லோரையும் ஏதாவது ஒரு வகையில் முட்டாளாக்கத்தான் பார்த்தார்கள். அதேபோல வீணாவும் கூட ஏமாற்ற முயற்சித்தார். ஆனால் கொஞ்சம் ஓவராகி விட்டது அது.

கல்யாணமாயிப் போச்சாம்

கல்யாணமாயிப் போச்சாம்

நேற்று வீணா மாலிக் தரப்பிலிருந்து வெளியான செய்தி இதுதான் - வீணா மாலிக்குக்கு மார்ச் 30ம் தேதி கல்யாணமாகி விட்டது. ரகசியமாக இது நடந்தது. அதில் குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டும்கலந்து கொண்டனர் என்று அந்த செய்தி கூறியது.

அவரே டிவிட்செய்தார்

அவரே டிவிட்செய்தார்

இந்த செய்தியை வீணாவே டிவிட்டரில் போட்டு விட்டார். இதனால் லைட்டாக பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏப்ரல் ஃபூலானீங்களா... ?

ஏப்ரல் ஃபூலானீங்களா... ?

இதையடுத்து மீண்டும் ஒரு டிவிட்டைத் தட்டி விட்டார் வீணா. அதில், ஏப்ரல் பூல் ஆக்கும் வகையிலேயே இந்த கல்யாண டிவிட்டை வெளியிட்டதாக கூறியிருந்தார் வீணா.

சினிமாவுடன்தான் கல்யாணம்...

சினிமாவுடன்தான் கல்யாணம்...

இதுகுறித்து வீணா கூறுகையில், எல்லோருக்கும் ஒரு நாள் நிச்சயம் கல்யாணமாகும். எனக்கும் அப்படியே நடக்கும். இப்போதைக்கு நான் சினிமாவைத்தான் கட்டியுள்ளேன். சினிமாப் படங்களுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். எல்லோருக்கும் ஹேப்பி ஏப்ரல் 1 என்று கூறியிருந்தார் வீணா.

பஞ்சாப் குருத்வாராவில் வழிபாடு

பஞ்சாப் குருத்வாராவில் வழிபாடு

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவுக்கு வந்த வீணா மாலிக் அங்குள்ள குருத்வாராவுக்குப் போய் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். ஏக் தில் தி மம்லா என்ற பஞ்சாபி் படத்தில் வீணா மாலிக்கும் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது பாட்டியாலாவில் நடந்து வருகிறது.

அழகான சல்வார் உடையில்

அழகான சல்வார் உடையில்

வழக்கமாக கவர்ச்சி உடையில் காணப்படும் வீணா மாலிக், 9வது சீக்கிய குரு ஸ்ரீதேஜ் பகதூர் குருத்வாராவுக்கு வந்தபோது அழகான சல்வாரில் பாந்தமாக காணப்பட்டார். தலையில் மஞ்சள் நிற சன்னியால் மூடியிருந்தார்.

படம் நன்றாக ஓட பிரார்த்தனை

படம் நன்றாக ஓட பிரார்த்தனை

குருத்வாராவுக்குள் போன வீணா, பயபக்தியுடன் வழிபட்டார். தனது எதிர்வரும் படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

மனசுக்கு இதமா இருக்கு

மனசுக்கு இதமா இருக்கு

குருத்வாராவுக்குப் போய் வந்தது குறித்து வீணாகூறுகையில், மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. திருப்திகரமாக வழிபட்டேன்.

எனக்காகவும், என் படத்துக்காகவும்

எனக்காகவும், என் படத்துக்காகவும்

எனக்காகவும், என் படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காகவும் குருத்வாராவுக்குச் சென்று வழிபட்டேன்.

கடவுளுக்கு எல்லையில்லை

கடவுளுக்கு எல்லையில்லை

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. கடவுளுக்கும், அன்புக்கும் எல்லையே இல்லை. மத நம்பிக்கைக்கும் எல்லை கிடையாது. அனைத்து மதங்களும் அன்பைத்தானே போதிக்கின்றன என்றார் வீணா.

வீணாவுக்கு எம்மதமும் சம்மதே

வீணாவுக்கு எம்மதமும் சம்மதே

வீணா ஏற்கனவே அஜ்மீர் தர்காவுக்குப் போய் வந்துள்ளார். பகவத் கீதையும் படிக்கிறார். தற்போது குருத்வாராவுக்கும் போய் வந்துள்ளார். அடுத்து சர்ச்சுக்குப் போவார் என்று எதிர்பார்க்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bollywood actress Veena Malik is turning into religious, the actress currently is in Punjab shooting for her upcoming Punjabi movie “Eh Dil The Mamla” where she took some time out from her hectic schedule to visit Gurudwara of ninth Sikh guru Shri Teg Bahadur in Patiala. The beautiful actress was seen in Gurudwara in Salwar Suit covering her head by her yellow Chunni. She offered prayers in Gurudwara to seek a blessing for her upcoming movie. She is currently busy in promoting her movie “The City That Never Sleeps” which is produced by Satish Reddy and Directed by Haroon Rashid.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more