TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
துபாய் தொழிலதிபரை மணந்த நடிகை வீணா மாலிக்
மும்பை: பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நடிகை வீணா மாலிக் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சேனல் ஒன்றின் 'பிக்பாஸ்' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.
இதன்மூலம் இந்தியாவில் பிரபலம் ஆனார் வீணா மாலிக். இந்த நிலையில் வீணா மாலிக் துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்தார். தொழில் அதிபரான ஆசாத்பஷீர்கான் துபாயிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
(நடிகை வீணா மாலிக், ஆசாத்பஷிர்கான் காத்தக்)
கவர்ச்சி நடிகை
டாப்லெஸ் போஸ் கொடுத்தும், கவர்ச்சி வேடங்களில் நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாலிவுட் நடிகை வீனா மாலிக். சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து கன்னடத்தில் உருவான சில்க் சக்கத் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார். இது சர்ச்சைக்குள்ளானது. இப்பிரச்னை முடிவதற்குள் படுகவர்ச்சி வேடத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
எடுபடாத கவர்ச்சி
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதும் இவரது சினிமா மார்க்கெட் உயரவில்லை. இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். மல்லிகா ஷெராவத் டி.வி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று காதலனை தேர்வு செய்தது போல் வீணாவும் அதே பாணியில் காதலனை தேர்வு செய்ய எண்ணினார். ஆனால் அவர் பங்கேற்க விருப்பம் தெரிவித்த ரியாலிட்டி ஷோ ரத்தானது.
துபாய் தொழிலதிபர்
இந்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்தார். இவர் வீணாமாலிக்கின் தந்தையின் நண்பரின் மகன் ஆவார். தொழில் அதிபரான ஆசாத்பஷீர்கான் துபாயிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
மகிழ்ச்சியான பெண்
திருமணம் பற்றி வீணா மாலிக் கூறுகையில், இது பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண் நானாகத்தான் இருப்பேன். இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள். மற்ற விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன்'' என்று டுவிட்டரில் கூறியுள்ளார்
மூன்று நாடுகளில்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை துபாய், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வீணா மாலிக் தெரிவித்தார்.
71000 பேர் விருப்பம்
தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் வீணா மாலிக் பங்கேற்ற போது அவரை 71 ஆயிரம் பேர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.