கணவர் இறந்த சோகம்: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை.. சிகிச்சைக்கு பின் 'டிஸ்சார்ஜ்'!

மும்பை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூத்த நடிகை சாய்ரா பானு சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் பழம் பெரும் நடிகர் திலீப் குமார். ட்ராஜிடி கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

நடிகர் திலீப் குமார் தேவதாஸ், கங்கா ஜமுனா, அண்தாஸ், ஆன், ராம் அவுர் ஷியாம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திலீப்குமார் கடைசி படம்

திலீப்குமார் கடைசி படம்

பாலிவுட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ள திலீப் குமார் கடைசியாக 1998ஆம் ஆண்டு குயிலா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் திலீப்குமார்.

ஜூலை மாதம் மரணம்

ஜூலை மாதம் மரணம்

மும்பை பாந்த்ராவில் வசித்து வந்த திலீப்குமார் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். கடந்த ஜூலை மாதம் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீப்குமார் ஜூலை 7 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

திலீப்குமாரின் காதல் மனைவி

திலீப்குமாரின் காதல் மனைவி

அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் என ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவும் இரங்கல் தெரிவித்தது. இந்நிலையில் அவரது காதல் மனைவியும் மூத்த பாலிவுட் நடிகையுமான சாய்ரா பானு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பல வெற்றி படங்கள்

பல வெற்றி படங்கள்

சாய்ரா பானு 1961 ஆம் ஆண்டு "ஜங்லீ" படத்தில் ஷம்மி கபூருக்கு ஜோடியாக அறிமுகமானார் மற்றும் 'ப்ளஃப் மாஸ்டர்', 'ஜுக் கயா அஸ்மான்', 'ஆயி மிலன் கி பேலா', 'பியார் மொஹபத்', 'விக்டோரியா' போன்ற படங்களில் நடித்துள்ளார். எண் 203 ',' ஆத்மி அவுர் இன்சான் ',' ரேஷம் கி டோரி ',' ஷாகிர்ட் 'மற்றும்' திவானா ' ஆகிய படங்களும் அவரது நடிப்பில் வெளியான வெற்றி படங்கள் ஆகும்.

அதிக சம்பளம் வாங்கிய நடிகை

அதிக சம்பளம் வாங்கிய நடிகை

இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் பிரபலமான நடிகை என்ற பெருமையை பெற்ற நடிகை சாய்ரா பானு. பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவராகவும் வலம் வந்தார் நடிகை சாய்ரா பானு. 'சகினா' மற்றும் 'கோபி' உட்பட பல படங்களில் சாய்ரா பானுவும் திலீப்குமாரும் ஒன்றாக நடித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 1966ஆம் ஆண்டு நடிகர் திலீப்குமாரை திருமணம் செய்து கொண்டார் சாய்ரா.

22 வயது வித்தியாசம்

22 வயது வித்தியாசம்

சாய்ரா பானு திலீப்குமாரை திருமணம் செய்யும் போது சாய்ரா பானுவுக்கு 22 வயது. திலீப்குமாருக்கு 44 வயது. தன்னை 22 வயது மூத்த நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாய்ராபானு. சாய்ரா பானு - திலீப்குமார் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

சாய்ரா பானு உடல் நலக்குறைவு

சாய்ரா பானு உடல் நலக்குறைவு

இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் தனது கணவர் திலீப் குமாரை இழந்த 77 வயதான நடிகை சாய்ரா பானு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை காரணமாக மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வீடு திரும்பிவிட்டார்

வீடு திரும்பிவிட்டார்

இந்நிலையில் திலீப்குமார் - சாய்ரா தம்பதியின் குடும்ப நண்பரான பரூக்கி, ஊடகத்திற்கு அளித்த தகவலில்

"சாய்ரா நலமாக இருக்கிறார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ஓய்வெடுக்கிறார். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி," என பதிவிட்டுள்ளார்.

கணவர் இறந்த துக்கம்

கணவர் இறந்த துக்கம்

இதனிடையே மருத்துவமனை மருத்துவர் ஒருவர் சாய்ரா பானுவுக்கு இதயப் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறியிருந்தார்.

சாய்ரா பானுவின் கணவரும் திரை சின்னமான திலீப் குமார் தனது 98 வது வயதில் காலமானார். அவரது மறைவு சாய்ரா பானுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X