»   »  நான் நல்லாருக்கேன், விபத்தெல்லாம் நடக்கவே இல்லை... மறுக்கும் தெலுங்கு நடிகை லயா

நான் நல்லாருக்கேன், விபத்தெல்லாம் நடக்கவே இல்லை... மறுக்கும் தெலுங்கு நடிகை லயா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: அமெரிக்காவில் வசித்து வரும் தெலுங்கு நடிகை லயா தான் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை மறுத்துள்ளார்.

சுயம்வரம், மனோகரம், பிரேமிச்சு ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்தவர் லயா. இப்போது அமெரிக்காவில் திருமணமாகி டாக்டர் கணவருடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

லாஸ் ஏஞ்செல்ஸில் வசித்து வரு லயா, இப்போது சினிமாவில் நடிப்பதில்லை.

விபத்து...

விபத்து...

இந்த நிலையில் அமெரிக்காவில் சாலை விபத்தில் லயா சிக்கியதாகவும், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் தெலுங்குத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

கவலை...

கவலை...

கேரளாவில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரும் கவலை அடைந்தனர். லயாவின் அமெரிக்க வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புகள் பறந்தன.

தவறான தகவல்...

தவறான தகவல்...

இந்த நிலையில் லயா தான் நலமாக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் விபத்தில் சிக்கியதாக வந்த செய்தி தவறானது, உண்மையல்ல.

நலமாக இருக்கிறேன்...

நலமாக இருக்கிறேன்...

நான் நல்ல நலமுடன் இருக்கிறேன். விபத்தில் சிக்கவில்லை. மீடியாக்கள் இதுபோன்ற செய்தியை வெளியிடும் முன்பு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Accident news pina Laya reaction

Posted by Shreyas Media on Tuesday, September 22, 2015

நன்றி...

ஆனபோதும், என் மீது அக்கறை கொண்டு கவலை கொண்டு, விசாரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் லயா.

English summary
Actress Laya, who is known for her works like Swayamvaram, Manoharam, Preminchu etc, has reacted on her accident reports.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil