மருதம் பட நாயகியிடம்.. பயில்வான் கேட்ட அந்த கேள்வி.. சரியான பதிலடி கொடுத்த நடிகை!
சென்னை: விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது "மருதம்". இதில், ரக்ஷனா, அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ் உள்ளிட்ட பலர் விதார்த்துடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இப்படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், இன்று இப்படம் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இப்படம் குறித்து பேசிய நடிகர் விதார்த், நானும் உங்களுடன் சேர்ந்து தான் படத்தை பார்த்தேன் படம் மிகவும் நன்றாக வந்து இருக்கிறது. படத்தின் நாயகியான ரக்ஷனா சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் சிறுவனாக நடித்த பையன், எங்களை விட, மிகவும் பிரமாதமாக நடித்து இருக்கிறார். இசையமைப்பாளரின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது. அனைவருக்கும் நான் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது உங்களுடைய கையில் தான் இருக்கிறது என்றார்.

மருதம் செய்தியாளர் சந்திப்பு: நான் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவன். ராணிப்பேட்டை மாவட்டம் குறித்து எந்த கதைகளிலும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அதனால், அதை நான் படத்தில் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன். மருதம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். என் ஊரில் என்னுடைய நண்பனுக்கு நடந்ததை மைய கருவாக வைத்து இப்படத்தை எடுத்தேன். இந்த கதையில் விதார்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஏன் என்றால் அவரின் முந்தைய படத்தை பார்த்து இருக்கிறார். இதனால், இந்த கதையில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். நான் நினைத்தது போலவே விதார்த் சிறப்பாக நடித்து இருக்கிறார் என்றார்.
பயில்வான் கேட்ட அந்த கேள்வி: இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், படத்தின் நாயகியான ரக்ஷனாவிடம் முதல் படத்திலேயே தாயாக நடித்து விட்டால், அடுத்த படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என கேட்டார். அதற்கு பதில் அளித்த ரக்ஷனா, நான் இரண்டாவது படத்தில் நடித்து விட்டேன். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அந்த படத்தின் இயக்குனர் என்னை இப்படி கேட்கவில்லை என சரியான பதிலடி கொடுத்தார். அதைத் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் உன்னுடைய நன்மைக்குத் தான் சொல்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி நடித்ததால் தான் அவருக்கு பட வாய்ப்பு இல்லை என்றார்.
சரியான பதிலடி: இதற்கு பதில் அளித்த ரக்ஷனா, ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது உங்களுக்கு தெரியுமா? தெரியா? ஐஸ்வர்யா ராஜேஷூக்கு என்று சினிமாவில் தனி பெயர் இருக்கிறது. அதேபோல, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து விட்டால, அதன் பிறகு தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்கிற ரூல் இங்கே இருக்கிறது. அப்படி ஒரு ரூலை இங்கே இருப்பவர்கள் வகுத்து இருக்கிறார்கள். அந்த ரூலை யாராவது பிரேக் செய்ய வேண்டும். அதை உடைக்க சினிமாவிற்கு யாராவது வர வேண்டும், அது நானாகவே இருக்கிறேன் என சரியான பதில் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











