»   »  தனுஷின் புதிய படம்... "சீனியர்" வித்யா பாலன் அவுட்... "சின்னப் பெண்" லட்சுமி மேனன் இன்!

தனுஷின் புதிய படம்... "சீனியர்" வித்யா பாலன் அவுட்... "சின்னப் பெண்" லட்சுமி மேனன் இன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் தற்போது விஐபி 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா எமி ஜாக்சன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இது தவிர பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

துரை செந்தில் இயக்கத்தில்...

துரை செந்தில் இயக்கத்தில்...

இந்தப் படங்களைத் தொடர்ந்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இப்படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் தற்போது வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இரட்டை வேடம்...

இரட்டை வேடம்...

இந்தப் படத்தில் முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

வித்யாபாலன்...

வித்யாபாலன்...

ஆனால், படக்குழு கேட்ட நேரத்தில் தன்னிடம் தேதிகள் இல்லாததால், விருப்பம் இருந்தும் தனுஷ் படத்தில் வித்யாபாலன் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்தக் கதாபாத்திரத்திற்கு வித்யாபாலனுக்கு இணையான நடிகையை படக்குழுவினர் தேடினர்.

லட்சுமிமேனன்...

லட்சுமிமேனன்...

இறுதியாக லட்சுமிமேனனை அந்தக் கேரக்டரில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுக்குறித்து லட்சுமிமேனனிடம் பேசிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆர்வம்...

ஆர்வம்...

தனுஷூடன் நடிக்க லட்சுமி மேனனும் ஆர்வமாக இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப் படுகிரது.

ஷாம்லி...

ஷாம்லி...

லட்சுமிமேனன் தவிர தனுஷின் மற்றொரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஷாலினியின் தங்கையான ஷாம்லி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
After Maari, Dhanush is a busy man, he has been shuttling between the sets of untitled movie with Prabhu Solomon, VIP2 and yet another flick with Durai of Kaakisattai and Ethirneechal fame. Its rumored that the movie will figure Dhanush in a dual role, that of brothers, the first for the remarkable actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil