»   »  பாவம், இந்தப் புள்ளை என்னங்க செய்யும்.. அனுஷ்காவுக்கு வக்காலத்து வாங்கும் வித்யா பாலன்!

பாவம், இந்தப் புள்ளை என்னங்க செய்யும்.. அனுஷ்காவுக்கு வக்காலத்து வாங்கும் வித்யா பாலன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகக்கோப்பை போட்டியில் விராத் கோஹ்லியின் ஆட்டத்துக்கு அனுஷ்கா ஷர்மா மீது ரசிகர்கள் பழி சுமத்துவது நியாயமில்லை என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் கோஹ்லி ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதற்குக் காரணம், கோலியின் காதலியான நடிகை அனுஷ்கா ஷர்மா, போட்டியை நேரில் காண வந்ததேக் காரணம் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், இந்திய அணியின் தோல்விக்கு அனுஷ்கா எப்படிக் காரணமாக முடியும் என பாலிவுட் பிரபலங்கள் பலர் அனுஷ்காவுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார் நடிகை வித்யாபாலன்.

அப்போது அனுஷ்கா விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:-

விளையாட்டில் சகஜம்...

விளையாட்டில் சகஜம்...

விளையாட்டில் ஒரு வீரர் ஒரு நாள் சதம் அடிக்கலாம்; ஒரு நாள் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகலாம்.

அபத்தமானது...

அபத்தமானது...

அவரது விளையாட்டையும் ஒரு நபர் உடன் வருவதையும் தொடர்புபடுத்துவது அபத்தமானது. கோலியின் விளையாட்டுக்கு அனுஷ்கா ஷர்மா மீது பழி சுமத்துவது நியாயமில்லை.

உடல் மீது கவனம்...

உடல் மீது கவனம்...

பெண்கள் என்றாலே அவர்களின் உடலமைப்பு மீதுதான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நான் குண்டாகியிருக்கிறேனா இல்லையா என்றெல்லாம் ஊடகத்தில் பேசப்படுகிறது.

முன்னேற்றம்...

முன்னேற்றம்...

ஆனால், பெண்கள் பல இந்த தடைகளை எல்லாம் தாண்டி புதிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.

English summary
The bollywood actress Vidya Balan supports Anushka sahrma in Virat kholi issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil