»   »  வெள்ளித்திரையில் இருந்து மீண்டும் சின்னத்திரைக்கு தாவும் வித்யா பாலன்

வெள்ளித்திரையில் இருந்து மீண்டும் சின்னத்திரைக்கு தாவும் வித்யா பாலன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.

விளம்பரங்களில் நடித்த வித்யா பாலன், ஹம் பாஞ்ச் என்ற இந்தி டிவி தொடரில் நடித்தார். அதன் பிறகு தான் அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து சின்னத்திரையை விட்டுவிட்டு பெரிய திரைக்கு சென்றார்.

கான்கள் ஆளும் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

நடிப்பு

நடிப்பு

நடிக்கத் தெரியவில்லை என்று சிலரால் ஒதுக்கப்பட்ட வித்யா பாலன் பாலிவுட்டில் நடிப்புக்காக பேசப்படுகிறார். வெயிட்டான கதாபாத்திரமா கூப்பிடு வித்யாவை என்று கூறும் அளவுக்கு நடிப்பில் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

வித்யா பாலன் நடிக்கும் படங்களில் எல்லாம் ஹீரோயினின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவர் மரத்தை சுற்றி சுற்றி வந்து ஹீரோவுடன் டான்ஸ் ஆடுவதுடன் நிற்பது இல்லை.

டிவி

டிவி

பாலிவுட்டில் இருக்கும் வித்யா பாலனை மீண்டும் சின்னத்திரைக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறார்கள். சின்னத்திரையில் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்த வித்யா பாலனை அணுகியுள்ளனர். நிகழ்ச்சி அவருக்கு பிடித்துள்ளதால் அதை நடத்த ஒப்புக் கொண்டுள்ளாராம்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட் பிரபலங்கள் பலர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை நடத்துவது, நடுவராக இருப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vidya Balan is approached to do a TV talk show. Buzz is that the actress has agreed to do it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil