»   »  டெங்குவால் அவதிப்படும் 'டர்ட்டி பிக்சர்' சில்க் ஸ்மிதா

டெங்குவால் அவதிப்படும் 'டர்ட்டி பிக்சர்' சில்க் ஸ்மிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறாராம்.

பாலிவுட்டில் கான்களுக்கு நிகராக நடிப்பில் அசத்தி வருபவர் வித்யா பாலன். ஹீரோவுக்காக படம் ஓடுவது போன்று வித்யாவுக்காக படம் ஓடும். வித்யா கஹானி படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பேகம் ஜான் ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Vidya Balan is down with dengue

கஹானி 2 படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்ற வித்யா நாடு திரும்பியுள்ளார். மும்பைக்கு வந்த அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வித்யாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

வித்யா டெங்குவால் அவதிப்பட்டு வருகிறார். அவரை 10 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.

English summary
Bollywood actress Vidya Balan is down with dengue. Doctors have asked her to take rest for 10 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil