»   »  சாப்ளினாக மாறப் போகும் வித்யா பாலன்!

சாப்ளினாக மாறப் போகும் வித்யா பாலன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மலையாள இயக்குநர் ஆர்.சரத் இயக்கத்தில் இந்தியில் சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் நடிகை வித்யாபாலன்.

தன் வித்தியாசமான வேடங்களால் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வித்யாபாலன். தற்போதும் இவர் வித்தியாசமான படமொன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதுவும் சார்லி சாப்ளினாக ஆண் வேடத்தில் நடிக்க.

கமலின் அவ்வை சண்முகி உள்பட ஆண்கள் பெண் வேடமணிந்து நடித்த படங்கள் ஏராளம். தற்போது, பெண் ஆணாக வேடமிடும் புதிய முயற்சியில் இறங்க உள்ளார் வித்யாபாலன்.

புத்தனும் சாப்ளினும் சிரிக்குனு...

புத்தனும் சாப்ளினும் சிரிக்குனு...

மலையாள இயக்குநர் ஆர்.சரத் இயக்கத்தில் காமெடி நடிகர் இந்திரன்ஸ் சார்லி சாப்ளினாக நடித்துள்ள படம் ‘புத்தனும் சாப்ளினும் சிரிக்குனு'. இப்படத்தில் சார்லி சாப்ளினின் தீவிர ரசிகனாக நடித்துள்ள இந்திரன்ஸ், இறுதியில் நடைஉடை பாவனை என அனைத்திலும் சார்லி சாப்ளினாகவே மாறி விடுவாராம்.

இந்தியில் ரீமேக்...

இந்தியில் ரீமேக்...

கேரளாவில் வெற்றிநடைப் போட்ட இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் பண்ணுகிறார் ஆர்.சரத். ஆனால், இம்முறை சார்லி சாப்ளின் வேடத்திற்கு அவர் தேர்வு செய்தது நடிகரை அல்ல, ஒரு நடிகையை.

வித்யாபாலன்...

வித்யாபாலன்...

ஆம், அவர் தான் வித்யாபாலன். தனது விருப்பத்தை தயங்கியபடியே வித்யாபாலனிடம் தெரிவித்துள்ளார் சரத். ஆனால், சற்றும் தாமதிக்காமல் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார் வித்யாபாலன்.

சாப்ளினின் ரசிகை...

சாப்ளினின் ரசிகை...

படங்கள் தோறும் தன்னை வித்தியாசப் படுத்திக் காட்ட விரும்பும் நடிகையான வித்யாபாலன், சார்லி சாப்ளினின் ரசிகையாம். அதனால் தான் உடனடியாக இப்படத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம்.

சாப்ளினின் பேத்தி...

சாப்ளினின் பேத்தி...

இது தவிர இந்த மலையாளப் படத்தின் பிரிமீயர் ஷோ சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. அதில் சார்லி சாப்ளினின் பேத்தி லாரா சாப்ளின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனாலேயே இப்படத்தின் மீது மரியாதை வந்து விட்டதாம் வித்யாபாலனுக்கு.

கவர்ச்சி நாயகி...

கவர்ச்சி நாயகி...

நடிப்பைப் போலவே கவர்ச்சியிலும் பின்னியெடுக்கும் வித்யாபாலனை, கோட் சூட் போட்டு சார்லி சாப்ளின் வேடத்தில் பார்க்க அவரது ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.

பாபி சோசூஸ்...

பாபி சோசூஸ்...

ஆண் வேடத்தில் வித்யாபாலன் நடிப்பது இது முதன்முறையல்ல. ஏற்கனவே, பாபி சோசூஸ் என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்திருந்தார் வித்யாபாலன். இதில், பிச்சைக்காரர், டப்பா வாலா, பஞ்சாப் சிங், ஜோதிடர் என 6 ஆண் வேடங்கள் ஆகும்.

English summary
Malayalam director R. Sarath has reportedly signed Vidhya Balan for a Hindi film on Chaplin. He has revealed that the actress has agreed, though at the moment she is abroad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil