»   »  ஏன் எல்லோரும் வித்யா பாலனைப் பார்த்து "வாவ்"னு சொல்றாங்க தெரியுமா...?

ஏன் எல்லோரும் வித்யா பாலனைப் பார்த்து "வாவ்"னு சொல்றாங்க தெரியுமா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் தான் சேலைகளை எப்போதும் விரும்பி அணிவதன் காரணத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தென்னிந்தியாவில் சேலை கட்டும் நடிகைகளைப் பார்ப்பதே அரிதாக உள்ள நிலையில், எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சேலை அணிந்து அசத்தி விடுகிறார் வித்யாபாலன்.

இந்தப் பழக்கத்தின் காரணமாக பல்வேறு விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட போதிலும், சேலை அணிந்து செல்வதை தற்போது வரை வித்யாபாலன் மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் சேலைகளை அதிகம் விரும்பி அணியும் காரணத்தை வித்யாபாலன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

வித்யாபாலன்

வித்யாபாலன்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் தான் சேலைகளை எப்போதும் விரும்பி அணிவது பற்றி கூறும்போது "நான் படிப்படியாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சேலை அணிந்து செல்ல ஆரம்பித்தேன். நீங்கள் இப்படி வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம் என்று என்னைப் பார்ப்பவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

மற்ற உடைகளை

மற்ற உடைகளை

எல்லா விதமான சேலைகளும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன.நான் மற்ற உடைகளை அணிந்த போதிலும் கூட சேலை மட்டுமே என்னைப் பாதுகாப்புடன் உணரச் செய்கிறது.இதனால் எனது அடையாளங்களில் ஒன்றாக சேலையும் மாறிவிட்டது.

என்னை நானே

என்னை நானே

முன்பெல்லாம் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது எனது மகிழ்ச்சியில் நான் அதிகக் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டேன். இப்போது மற்றவர்கள் என்னைப் பார்த்து வாவ்! என்று சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இந்த மாற்றம் எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டு ரசிகர்

தமிழ்நாட்டு ரசிகர்

வித்யாபாலனை சேலை அணிய வைத்த பெருமை நமது தமிழ்நாட்டு ரசிகர்களையே சேரும். ஆமாம் தமிழ்நாட்டை சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவர், அழகான 21 கைத்தறி நெசவு சேலைகளை அவருக்கு அனுப்பியிருக்கிறார். அதன் வடிவமைப்பில் வியந்துபோன வித்யாபாலன் அதுமுதல் கைத்தறி சேலைக்கு தாவிவிட்டாராம்.

நேரில் பார்க்க ஆர்வம்

நேரில் பார்க்க ஆர்வம்

மேலும் "கைகளினால் நெய்யப்பட்ட, நமது நாட்டில் தயாராகும் புடவைகளை அணிவதில் தான் எனக்கு விருப்பம் அதிகம். அப்படி இந்தியா முழுவதிலும் பல இடங்களில் இருந்து நான் நிறைய புடவைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். மேலும் பேப்பரில் இருக்கும் ஒரு டிசைன், எப்படி புடவையில் அச்சாக மாறுகிறது என்கிற மாயாஜாலத்தை நேரில் பார்க்கவும் விரும்புகிறேன்" என்று முன்னதாக ஒரு பேட்டியில் வித்யாபாலன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood Actress Vidya Balan says that she Loves Wearing the Traditional Outfits, Because of the Comfort it Provide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil