»   »  உங்க மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கன்னு ஹீரோவை கேட்க வேண்டியது தானே?: வித்யா பாலன்

உங்க மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கன்னு ஹீரோவை கேட்க வேண்டியது தானே?: வித்யா பாலன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திருமணமான நடிகையை பார்த்தால் இன்னும் குழந்தை பெறவில்லையா என்று கேட்போர் உங்களின் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக்குவீர்கள் என நடிகர்களை கேட்க வேண்டியது தானே என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் வித்யா பாலன். அவர் நடித்துள்ள கஹானி 2 படம் இன்று ரிலீஸாகி உள்ளது.

இந்நிலையில் வித்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நடிகைகள்

நடிகைகள்

பேட்டிகளின்போது என் திருமண வாழ்க்கை மற்றும் நான் எப்பொழுது குழந்தை பெறப் போகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். திருமணமான நடிகர்களும் உள்ளனர். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக்குகிறீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை.

நடிகை

நடிகை

நடிகர்களிடம் உங்களின் திருமண வாழ்வு எப்படி உள்ளது என்று கூட யாரும் கேட்பது இல்லை. திருமணமான பெண் என்பதை தாண்டி எனக்கென ஒரு அடையாளம் உள்ளது.

சித்தார்த்

சித்தார்த்

என் வாழ்வில் நான் தான் மிகவும் முக்கியமான நபர் என்று கூறினால் மக்கள் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். திருமணமானதால் சித்தார்த் தான் முக்கியம் என்று நான் கூற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

டோன்ட் கேர்

டோன்ட் கேர்

சித்தார்த்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனாலும் என் வாழ்வில் நான் தான் முக்கிய நபர். இப்படி சொல்வதால் நான் சுயநலவாதி என மக்கள் நினைத்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

English summary
Actress Vidya Balan said that, "In interviews I get asked about my marriage and when I am having a child, time and again. There are other actors, male actors, who have gotten married. Obviously they are not asked, 'when are you impregnating your wife?"

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil