»   »  ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை பறிகொடுத்த வித்யுலேகா.. மோடியிடம் உதவி கேட்டு கோரிக்கை

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை பறிகொடுத்த வித்யுலேகா.. மோடியிடம் உதவி கேட்டு கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆஸ்திரியா: நடிகை வித்யுலேகா ஆஸ்திரியா நாட்டுக்கு சுற்றுலா சென்று தனது பாஸ்போர்ட்டை இழந்த சம்பவம், கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வித்யுலேகா. வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, வேதாளம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டுக்கு சுற்றுலா சென்ற வித்யுலேகா தனது பாஸ்போர்ட் முதலானவற்றை இழந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஹோட்டலில்

ஹோட்டலில்

வித்யுலேகா தங்கியிருந்த ஹோட்டல் லாபியில் தான் இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது. இதில் பாஸ்போர்ட், பணம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை தான் இழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

பிரதமர்

பிரதமர்

திருட்டுப்போனதும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வித்யுலேகா சமூக வலைதளம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜிடம் இந்தியத் தூதரகத்தை எப்படி தொடர்பு கொள்வது என உதவி கோரினார்.

சிசிடிவி

சிசிடிவி

இதுகுறித்து வித்யுலேகா ''நான் தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவியை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் ஆஸ்திரியா போலீசார் அவற்றை பார்வையிட்டனர். பேக்கைத் திருடியவன் எனது கவனத்தைத் திசைதிருப்பி இந்த திருட்டை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்திய தூதரகம்

இந்திய தூதரகம்

எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இந்திய தூதரகம் 2 நாட்கள் தற்காலிக பயணத்திற்கான அனுமதியை வழங்கி எனக்கு உதவி செய்துள்ளது. நண்பர்களுடன் வந்த இந்த சுற்றுலா மிகவும் கசப்பான ஒன்றாக மாறிவிட்டது'' என்று கூறியிருக்கிறார்.

English summary
Actress Vidyullekha loses her Passport and Credit cards In Austria.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil