»   »  ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை பறிகொடுத்த வித்யூலேகா... பத்திரமாக சென்னை திரும்பினார்

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை பறிகொடுத்த வித்யூலேகா... பத்திரமாக சென்னை திரும்பினார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை இழந்து தவித்த நடிகை வித்யுலேகா தற்காலிக பாஸ்போர்ட் மூலம் சென்னை திரும்பினார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகைகளில் ஒருவர் வித்யுலேகா. சமீபத்தில் கோடை விடுமுறையைக் கழிக்க தனது தோழிகளுடன் வித்யுலேகா ஆஸ்திரியா சென்றிருந்தார்.

Vidyullekha Return to Chennai

அங்கே தனது பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடங்கிய பையை வித்யுலேகா திருட்டுக் கொடுத்தார். இதுகுறித்து ஆஸ்திரியா போலீசில் புகார் செய்த வித்யுலேகா பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டரில் உதவி கோரினார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரகம் அவசர நடவடிக்கை எடுத்து, வித்யூலேகாவுக்கு தற்காலிகமாக புதிய பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்தது.

அந்த பாஸ்போர்ட்டில் அவர் நேற்று காலை டெல்லி வந்து பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பினார். இதுகுறித்து அவரது தந்தை மோகன் ராமன் ''என்னுடைய மகள் பத்திரமாக சென்னை திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.

English summary
Actress Vidyullekha Return to Chenni. She says ''Back in Chennai! Safe and happy!
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil