»   »  விஜய் 61... ஜோதிகா அவுட்... உள்ளே வந்தார் நித்யா மேனன்!

விஜய் 61... ஜோதிகா அவுட்... உள்ளே வந்தார் நித்யா மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆக... விஜய்யின் புதுப் படத்தில் ஜோதிகா என்பது வெறும் செய்தியாகவே முடிந்துவிட்டது. இப்போது அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகை வந்துவிட்டார். அவர், நித்யா மேனன்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டவர் ஜோதிகா. ஆனால் கதையில் தனக்காக சில மாற்றங்களைக் கேட்டார் ஜோதிகா.

Vijay 61: Jyothika out, Nithya Menon in

அதைச் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இயக்குநர் இருந்ததால், முதல் கட்ட படப்பிடிப்புக்கு ஜோதிகா வரவில்லை. அப்போதே படத்தில் அவர் இல்லை என்பது தெரிந்துவிட்டது.

Vijay 61: Jyothika out, Nithya Menon in

இப்போது அந்த வேடத்துக்கு ஒப்பந்தமாகியிருப்பவர் நித்யா மேனன். இவர் மாற்றங்கள் எதையும் செய்யச் சொல்லவில்லை. கால்ஷீட்டும் தாராளமாக இருந்ததால் ஓகே சொல்லிவிட்டார்.

Vijay 61: Jyothika out, Nithya Menon in

பிரதான நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கெனவே அட்லீ இயக்கத்தில் தெறி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்.

English summary
After Jyothika has opted out from Vijay 61, now Nithya Menon has signed fro the same.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil