»   »  அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்- எமி ஜாக்சன் கருத்தால் சர்ச்சை

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்- எமி ஜாக்சன் கருத்தால் சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். இதனால் மேலும் அஜித் - விஜய் ரசிகர்களுக்குடையே மோதலை உருவாக்கியுள்ளது. எமி ஜாக்சன் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 59ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தெறி என்று டைட்டில் வைத்தனர். இந்த சர்ச்சையே ஓயாத நிலையில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தெறி பட தலைப்பு வேதாளம் படத்தில் அஜித் உச்சரிக்கும் தெறிக்க விடலாமா என்ற வசனத்தை தழுவி வைக்கப்பட்ட டைட்டில் என்று அஜீத் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த தலைப்பு வைக்கப்பட்ட நாள் முதல் அஜித் - விஜய் ரசிகர்களுக்குடையே சமூக வலைத்தள பக்கங்களில் வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.

தனுஷ் வாழ்த்து

தெறி படத்தின் தலைப்பு ரசிகர்களிடையே டுவிட்டர் யுத்தத்தை உருவாக்கியுள்ள நிலையில், தனுஷ் இந்த தலைப்புக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தெறி பட நாயகி புது சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் யுத்தம்

சூப்பர் ஸ்டார் யுத்தம்

சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவருக்கும் ரஜினிகாந்த் ஞாபகம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்பது குறித்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தெறி நாயகி கருத்து

ரசிகர்களின் யுத்தத்திற்கு நடுவே, 'தெறி' படத்தின் நாயகியும் முன்னணி நடிகைகளில் ஒருவருமான எமி ஜாக்சன் தனது டுவிட்டரில் 'விஜய் தான் சூப்பர் ஸ்டார். அவருடன் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

வரவேற்பும் எதிர்ப்பும்

புலி படத்தை ஒளிப்பதிவு செய்த நடராஜ், ஏற்கனவே விஜயை, சூப்பர் ஸ்டார் விஜய் என்று அழைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் இந்தநிலையில் இப்போது தெறி படத்தின் நாயகி விஜயை சூப்பர் ஸ்டார் என்று அழைத்துள்ளார். எமி ஜாக்சனின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பும், விஜய் ரசிகர்கள் ஆதரவும் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

English summary
While the sexagenarian legend Rajinikanth is still the superstar the fans of the younger generation stars Ajith and Vijay are always at loggerheads as to who will rule as the next superstar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil