»   »  எவ்ளோ பெரிய ஹீரோ விஜய், அவர் போய் பாயில..சான்சே இல்லீங்க: வியக்கும் பாப்ரி கோஷ்

எவ்ளோ பெரிய ஹீரோ விஜய், அவர் போய் பாயில..சான்சே இல்லீங்க: வியக்கும் பாப்ரி கோஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எவ்வளவு பெரிய ஸ்டார் விஜய் ஆனால் அவர் ஒரு சாதாரண மனிதன் போன்று தரையில் பாய் விரித்து ஓய்வு எடுக்கிறாரே என்று நடிகை பாப்ரி கோஷ் தெரிவித்துள்ளார்.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 60. இந்த படம் மூலம் முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தில் அபர்ணா வினோத் மற்றும் பெங்காளி நடிகையான பாப்ரி கோஷ் ஆகியோரும் உள்ளனர்.

மூன்றாவது ஹீரோயினான பாப்ரி விஜய் பற்றி வியந்து பேசியுள்ளார்.

பாய்

பாய்

விஜய் எவ்வளவு பெரிய நடிகர். அவர் ஒரு சாதாரண ஆள் போன்று படப்பிடிப்பின் இடையே தரையில் பாய் விரித்து அமர்ந்து ஓய்வு எடுக்கிறார் என்று பாப்ரியால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

எளிமை

எளிமை

விஜய் தமிழ்நாட்டில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருந்தாலும் மிகவும் சிம்பிளாக உள்ளார். சான்சே இல்லை, அவரை போன்று ஒருவரை பார்ப்பது மிக அரிது என்று பாப்ரி தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ.சி.

எஸ்.ஏ.சி.

பாப்ரி எஸ்.ஏ.சி.யின் டூரிங் டாக்கீஸ் மூலம் தான் கோலிவுட் வந்தார். இந்நிலையில் விஜய் பாப்ரியிடம் தனது தந்தையுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டறிந்தாராம். இதையும் பாப்ரி தான் கூறினார்.

காதல் இல்லை

காதல் இல்லை

படத்தில் எனக்கு விஜய்யை காதலிப்பது போன்ற கதாபாத்திரம் இல்லை. இருப்பினும் விஜய்யுடன் சில முக்கிய காட்சிகளில் வருவேன். மேலும் எனக்கு ஒரு பாடல் காட்சியும் உள்ளது என்கிறார் பாப்ரி.

English summary
Bengali actress Papri Ghosh couldn't stop wondering about the simplicity of Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil