Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மொக்க கதையை கூட கேக்க சொன்னார் விஜய்சேதுபதி.. அப்படியே ஃபாலோ பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
சென்னை : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரின் திரைப்படங்களும் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளில் வெளியாகி வருகிறது
இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி உள்ளனர். எனவே இந்த காம்போ இணையும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது
இந்த நிலையில் மொக்கை கதைய கூட கேளு என விஜய் சேதுபதி கூறியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.
திரை
தீப்பிடிப்பது
கன்ஃபார்ம்..
அனிருத்தின்
தரமான
சம்பவம்..
இதுதான்
விஜய்யின்
பீஸ்ட்
மோடு!

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் முயற்சிக்கு முயற்சிக்காத கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடிப்பதில் விஜய் சேதுபதிக்கு நிகராக நடிகைகளில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

மொத்த நடிப்பு திறமையும்
விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ ரணசிங்கம் என இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது இதில் க/பெ ரணசிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராஜேஷின் மொத்த நடிப்பு திறமையும் க/பெ ரணசிங்கம் படத்தில் வெளிப்படுத்தி இருப்பார். க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார்.

மொக்கைக் கதையை கூட கேட்குமாறு
சினிமாவிலும் சரி கதைகளை தேர்வு செய்வதிலும் சரி ஏதாவது சந்தேகம் இருந்தால் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் அணுகுவது விஜய்சேதுபதி தான் என்பது பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக திரைத்துறையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படபிடிப்பு தளத்தில் அவ்வப்போது சில டிப்ஸ்களை விஜய் சேதுபதி வஞ்சனையில்லாமல் வழங்கி வருகிறார் அந்த வகையில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் மொக்கைக் கதையை கூட கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கியமான விஷயம் இருக்கும்
மேலும் எந்த ஒரு கதையையும் அலட்சியமாக எண்ணிவிடாதே மொக்க கதைகள் கூட நமக்குத் தேவையான ஒரு முக்கியமான விஷயம் இருக்கும் எனவே எந்த ஒரு கதையையும் ஒதுக்கி விடக் கூடாது. இரண்டரை மணி நேரம் கதை கேட்பது கஷ்டம்தான் ஆனால் அதற்காக கதை கேட்பதை ஒதுக்கி விடாதே. ஒவ்வொரு கதையும் நமக்கு பொக்கிஷம் மாதிரி என விஜய் சேதுபதி கொடுத்த டிப்ஸை இன்றுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியே பின்பற்றி வருகிறாராம்.