வெறித்தனமான ஒர்க் அவுட்...ஸ்லிம்மான ஜாக்குலினை பார்த்து ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்
சென்னை : விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் ஜாக்குலின். கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, விஜய் டிவி ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

இந்த நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து ஜாக்குலின் தொகுத்து வழங்கினார். நடுவராக இருந்த ஈரோடு மகேஷ் தொடங்கி, ரக்ஷன் வரை ஜாக்குலின் அடிக்கடி கலாய்ப்பார்கள்.இதுவும் இந்த நிகழ்ச்சி ஹிட் ஆனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஜாக்குலின் - ரக்ஷன் ஜோடி பலரின் ஃபேவரைட் ஆக மாறியது. இதனால் அவர்கள் டேட்டிங் செய்வதாக கூட வதந்திகள் பரவின. இருந்தாலும் கொஞ்சி கொஞ்சி குழந்தை தனமாக பேசும் ஜாக்குலின் பேச்சுக்கு ஏராளமான ஃபேன்ஸ் உண்டு.
இதைத் தொடர்ந்து டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். முதல் படத்திலேயே நயன்தாராவிற்கு தங்கையாக நடித்து, தனது க்யூட்டான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார் ஜாக்குலின்.
பெரிய திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கவனம் செலுத்த துவங்கிய ஜாக்குலினுக்கு தேன்மொழி பிஏ சீரிலில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவும் ரசிகர்களுக்கு பிடித்து போக வேறு சில சீரியல்கள், வெப்சீரிஸ் போன்றவற்றில் நடிக்க ஜாக்குலினுடன் பேசப்பட்டு வருகிறது. வாய்ப்புக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் பூசினாற் போல் குண்டாக இருந்த உடம்பை, ஃபிட்டாக்க முடிவு செய்தார் ஜாக்குலின்.
இதனால் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வந்தார். தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளினார். வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்ததன் பலனாக தற்போது மொத்தமாக மாறி ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி விட்டார் ஜாக்குலின்.
ஜாக்குலினின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து விட்டு, என்னங்க...இப்படி மாறிட்டிங்க...சினிமாவில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடச்சிடுச்சா...ஸ்லிம்மாக செம சூப்பராக மாறிட்டிங்களே என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.ஜாக்குலினின் லேட்டஸ்ட் ஸ்லிம் தோற்றத்தை பார்த்து பலரும் இவருக்கு ஃபேனாகி விட்டனர். இதனால் இன்ஸ்டாவில் ஜாக்குலினை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளது.
ஜாக்குலின் ஒர்க்அவுட் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது. அடுத்து எப்போ சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் உங்களை பார்க்குறது என பலர் ஏக்கத்துடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











