அய்யோ பாவம்..சேற்றில் விழுந்து புரண்டு படாத பாடுபடும் சின்ன மருமகள் சீரியல் நடிகை!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. தமிழ்ச்செல்வி கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேரன்பை பெற்றுள்ளார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் கஷ்டப்பட்டு நடித்ததை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த பலர் அய்யோ பாவம் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் அனைவரும் பாராட்டை பெற்ற சின்ன மருமகள் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த தமிழ்ச்செல்வி பட்டம் வாங்க போராடி கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில்,ராஜாங்கத்தை காப்பாற்றுவதற்கான காட்டுக்குள் சேது மற்றும் தமிழ்செல்வி இருவரும் சென்று சித்தர் சொன்ன மருத்தை எடுத்துவந்து கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றுகின்றனர். இந்த எபிசோடு இரண்டு வாரத்திற்கு முன் ஒளிபரப்பானது.

சின்ன மருமகள்: அந்த படப்பிடிப்பு எப்படி நடந்தது என்று ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்வேதா சேற்றில் விழுந்து புரண்டு கொண்டு இருக்க சேது அவரை தன் உயிரைக்கொடுத்து காப்பாற்றுகிறார். மேலும், கடந்த மாதம், சின்னமருமகள் சீரியலுக்காக இந்த காட்சி படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு மூன்று நாள் நடந்தது, அந்த நேரம் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. நான் முழுவதுமாக நனைந்திருந்தாலும், மழையில் படப்பிடிப்பு நடத்துவது உண்மையில் மிகவும் வேடிக்கையாகவும் எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.
குவியும் பாராட்டு: சேற்றில் இருந்து குட்டைகள் வரை அனைத்தும் உண்மையானது. மிகவும் குளிராக இருந்தது, குளிர் காலநிலையை என்னால் நன்றாக கையாள முடியாததால் அது எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனாலும், நான் அதைச் செய்தேன். இப்போது அதைப் பற்றி நினைக்கும் போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது எனது சின்னமருமகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயக்குனருக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார். அந்த பதிவினைப் பார்த்த பலர், கடுமையான உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும் என அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











