»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை:

நடிகை விஜி அவசரப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டார் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

நடிகை விஜி தற்கொலை செய்து கொண்டது குறித்த விஷயம் தெரிந்ததும் அவர் வீட்டுக்கு வந்த நடிகர் விஜயகாந்த் கூறியதாவது:

விஜி என்னுடன் 3 படங்கள் நடித்திருக்கிறார். ரொம்ப நல்ல பெண் விஜி. மிகவும் ஒழுக்கமான, பண்பான பெண். நானே அவரது நல்ல குணம் குறித்து பலரிடம்கூறியிருக்கிறேன்.

மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு, நடக்கும் சக்தியை இழந்தபோது அவரை நான் சந்தித்தேன். நடக்கும் சக்தியை இழந்த அவர் தனதுதன்னம்பிக்கையால் மீண்டு வந்தார். இப்போது மீண்டும் இந்த முடிவை எடுத்து விட்டார்.

அவருடன் பழகிய பழைய நாட்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

சினிமா சான்ஸ் இல்லை:

சில காலம் சினிமா சான்ஸ் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார் விஜி. அது குறித்து விஜியின் அப்பா என்னிடம் பேசினார். கதாநாயகி சான்ஸ் கொடுக்க முடியாதநிலையில் இருப்பதைத் தெரிவித்தேன்.

மீண்டும் தொலைபேசியில் பேசிய அவர், விஜி மீண்டும் நடிக்கிற அளவுக்குத் தயாராகி விட்டாள் என்று தெரிவித்தார். அதன் பிறகுதான் சிம்மாசனம்படத்தில் நடிக்க வைத்தோம்.

காதல் விவகாரம் தெரியாது:

விஜி-ரமேஷ் காதல் விவகாரம் பற்றி எனக்குத் தெரியாது. கடந்த 10 நாட்களாக எனக்கு வாஞ்சிநாதன் படப்பிடிப்பு இருந்ததால் நான் பத்திரிக்கைகள்கூடப் படிக்கவில்லை. நான்கு நாட்களுக்கு முன் வந்திருந்த செய்தியைப் படித்திருந்தால் சக நடிகனாக இந்த விஷயத்தில் உதவி செய்திருப்பேன்.

டைரக்டர் ஏ.ஆர்.ரமேஷின் மனைவி எனக்கு நன்றாகத் தெரிந்தவர். அவரை சமாதானப்படுத்தி விஜியை, ரமேஷூக்குத் திருமணம் செய்து வைத்திருப்பேன்.எல்லாம் முடிந்து விட்டது. இதுபற்றி இனிமேல் பேசி பயனில்லை. விஜி அவசரப்பட்டு விட்டார்.

ரமேஷ் மீது தவறு இருந்தால் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். நடிகர் சங்கம் எதுவும் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் நடிகர் சங்கத்திலிருந்துஎதுவும் செய்ய இயலாது என்றார். பின்னர், விஜியின் தந்தை அஷ்வத்துக்கு ஆறுதல் கூறினார்.

விஜியின் காதலர் தப்பி ஓட்டம்

3 முறை தற்கொலைக்கு முயன்றவர் விஜி

விஜியின் கண்ணீர் கடிதம்

காதல் தோல்வியால் நடிகை விஜி தற்கொலை

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil