»   »  நடிப்புக்கு குட்பை சொன்ன வெங்கட் பிரபு ஹீரோயின்

நடிப்புக்கு குட்பை சொன்ன வெங்கட் பிரபு ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் இனிமேல் படங்களில் நடிக்கப் போவது இல்லை என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி. வெங்கட்பிரபு இயக்கிய சென்னை -28 படம் மூலம் நடிகையானார். இதையடுத்து அஞ்சாதே, சரோஜா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வனயுத்தம் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆடாம ஜெயிச்சோமடா

ஆடாம ஜெயிச்சோமடா

விஜயலட்சுமி கடைசியாக ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் நடித்திருந்தார். படங்களை அவசரப்பட்டு தேர்வு செய்யமாட்டேன். எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார் விஜயலட்சுமி.

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

விஜயலட்சுமியை சில காலமாக படங்களில் காணவில்லையே என்று ரசிகர்கள் நினைத்தனர். சரி அவருக்கு பிடித்த கதாபாத்திரம் கிடைக்கவில்லை போன்று, கிடைத்தவுடன்

நடிக்க வருவார் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஓய்வு

ஓய்வு

சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார் விஜயலட்சுமி. இது குறித்து அவர் கூறுகையில், இனி நான் படங்களில் நடிக்க மாட்டேன். நடிப்பை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளேன் என்றார்.

தயாரிப்பு

தயாரிப்பு

படங்களில் நடிக்காவிட்டாலும் திரைத் துறையில் தான் இருப்பேன். நான் படங்களை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இனி என்னை தயாரிப்பாளராக நீங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.

சிம்ரன்

சிம்ரன்

திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிட்ட சிம்ரனும் படத் தயாரிப்பில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி தமிழ் சினிமாவில் ஏராளமான பெண் தயாரிப்பாளர்களை பார்க்கலாம் போன்று.

English summary
Chennai 28 girl Vijayalakshmi has decided to quit acting and to begin a new journey in the film industry as a producer.
Please Wait while comments are loading...