»   »  மீண்டும் விஜயலட்சுமி

மீண்டும் விஜயலட்சுமி

Subscribe to Oneindia Tamil

பெரும் சர்சையை ஏற்படுத்தி ஓய்ந்த விஜயலட்சுமி இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

சூர்யா, விஜய் நடித்து ப்ரண்ட்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி.

தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி பிறந்து வளர்ந்தது பெங்களூரில். தமிழில் இவரது முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. இதனால் நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால் ப்ரண்ட்ஸ் படத்திற்கு பின் விஜயலட்சுமி நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் படி ஓடவில்லை.

இதனால் தமிழ் பட வாய்ப்புகள் குறைந்தது. இதையடுத்து டிவி சீரியலில் நடிக்க சென்றார். கே.பாலச்சந்தரின் தயாரிப்பில் ஒரு தொடரில் நடித்தார் விஜயலட்சுமி. ஆனால் அத்தொடர் பாதியிலேயே நின்று போனது.

பின்னர் கன்னடத்திற்கு சென்றார். அங்கும் அவரது ராசி அவரை பின் தொடர்ந்து. கன்னடத்திலும் சீண்ட ஆளிலாமல் திரிந்தார் விஜயலட்சுமி.

இந்நிலையில் தான் ராதிகாவின் தங்க வேட்டை நிகழ்ச்சியை கன்னடத்தில் தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சியும் படு சூப்பராக சென்று கொண்டிருந்த நேரத்தில் தங்கவேட்டை இயக்குனர் ரமேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகக் கூறி தற்கொலை முயற்சி செய்து பெரும் புயலை கிளப்பினர்.

சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலும் ஆனார்.

இந் நிலையில் நீண்ட இடைவேளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறார் விஜயலட்சுமி.

மாதவன், பாவனா நடிப்பில் சீமான் இயக்கும் வாழ்த்துக்கள் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் விஜயலட்சுமி.

Please Wait while comments are loading...