கரூர் துயரம்.. திடீரென வெளியான விஜய்யின் ஜன நாயகன் பட அப்டேட்.. பூஜா ஹெக்டே ரோல் இதுதானாம்!

சென்னை: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில், மன வேதனையில் இருந்து வரும் தவெக தலைவர் விஜய் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட கொண்டாட்டங்களை தவிர்க்க சொல்லியிருந்ததாக தகவல்கள் வெளியாகின. அக்டோபர் 5ம் தேதி வெளியாகவிருந்த ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகவில்லை.

இந்நிலையில், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக தற்போது விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தில் இருந்து ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.

Vijay s Jana Nayagan movie update Pooja Hegde character name in this movie revealed
Photo Credit:

அந்த அப்டேட்டில் ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்பதையும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே பிறந்தநாள்: 1990ம் ஆண்டு பிறந்த நடிகை பூஜா ஹெக்டே தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். பூஜா ஹெக்டே கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் பூஜா ஹெக்டேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ஜன நாயகன் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

பூஜா ஹெக்டே கேரக்டர்: ரெட்ரோ படத்தில் ருக்மணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்ற ஓபனிங் பாடலில் மோனிகாவாக வந்து மரண குத்து போட்டு இருந்தார். விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே அந்த படத்தில் 'கயல்' எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அதனை அறிவித்து பிறந்தநாள் போஸ்டரை ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு வெளியான நிலையில், ஜன நாயகன் பட அப்டேட்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

பொங்கல் ரிலீஸ் கன்ஃபார்ம்: கரூர் துயரத்துக்கு பிறகு விஜய்யின் ஜன நாயகன் பட அப்டேட்கள் இப்போதைக்கு வெளியாகாது என்றும் படமே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது தள்ளிப் போகிறது என்றும் அதற்கு பதிலாக சூர்யாவின் கருப்பு படம் அன்றைய தேதியில் வெளியாகும் என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கருத்துக்கள் கிளம்பிய நிலையில், ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் வருவது உறுதி என்பதை ஆணித்தரமாக இந்த வாழ்த்து போஸ்டர் மூலமாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகுமா? என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X