»   »  சினிமாவிற்கு வரும் வாரிசு நடிகை லவ்லின்...

சினிமாவிற்கு வரும் வாரிசு நடிகை லவ்லின்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா உலகத்திற்கு புதிதாக ஒரு வாரிசு நடிகை வரப்போகிறார். அவர் வேறு யாருமல்ல தில்லுமுல்லு படத்தில் அறிமுகமான விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின்.

சகோதரி நடிகைகள் சரிதாவும் விஜியும் பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற இவர்களின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளமை ததும்பும் கதாநாயகி அறிமுகமாகவுள்ளார். அவர் பெயர் லவ்லின்

லவ்லின் ஒரு பைலட் ஆக வேண்டும் என்பது தந்தையின் விருப்பம். சந்திரசேகர் பைலட் என்பதால் அந்த ஆசை இருந்தது. ஆனால் சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகியாக உருவாகவேண்டும் என்ற ஆசை ஏற்பட குடும்பத்தினரின் சம்மதத்துடன் தற்போது தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் லவ்லின்.

லவ்லின், மும்பையிலுள்ள அனுபம் கேர் சினிமாப் பள்ளியில் நடிப்புக் கலையைப் பயின்றுள்ளார். தற்போது துபாயில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை படித்து வருகிறார் வருகிறார்.

லவ்லின் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். லவ்லின் கதாநாயகியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் உள்ளிட்ட இதர தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லவ்லின் திரைத்துறைக்கு வரவேண்டும் என்பது அவரது ஆசை அதை நாங்கள் தடுக்கவில்லை என்கிறார் அவரது அம்மா விஜி. அம்மா, பெரியம்மா போல இவர் பெயரெடுப்பாரா பார்க்கலாம்.

English summary
Looks like one more star kid is going to debut soon. Aarohanam actress Viji Chandrasekhar's daughter Lovelyn

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil