»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காதல் தோல்வி காரணமாக நடிகை விஜி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன்னை திருமணம் செய்வதாக உறுதியளித்த காதலர் ஏமாற்றிவிட்டதால் இந்தமுடிவை எடுத்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஜி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சினிமாவில் சான்ஸ் இல்லாததால் தொலைக் காட்சித் தொடர்களில் விஜி நடித்துவந்தார். அப்போது தொலைக்காட்சி சீரியல் இயக்குனர் ஏ.ஆர். ரமேஷ் என்பவருடன்விஜிக்கு காதல் ஏற்பட்டது. ரமேஷ் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள், முரளி நடித்த அதர்மம் போன்ற படங்களைஇயக்கிய அரவிந்தராஜின் தம்பி தான் இந்த ரமேஷ்.

இந்தக் காதலில் திடீரென பிரச்சனை உருவானது. விஜியை மணந்து கொள்ள முடியாதுஎன ரமேஷ் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்துபோன விஜி, இந்தமுடிவை எடுத்துள்ளார்.

முன்னதாக தன்னைத் திருமணம் செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவிஜி கூறியிருந்தார். அதுவும் காதலர் வேலை பார்க்கும் தொலைக்காட்சிநிறுவனத்துக்கு முன்னால் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருப்பேன் என்றுகூறியிருந்தார்.

இந் நிலையில் விஜி ஏன் திடீரென தூக்கில் தொங்கினார் என்று தெரியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை விஜி அளித்த பேட்டியில், என்னைப் பிடிக்காதவரை நான்திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார்.

அதே தினம் ரமேஷ் அளித்த பேட்டியில், விஜி தான் என்னை லவ் பண்ணுவதாகக்கூறினார். நான் நல்ல நண்பராகத் தான் அவரிடம் பழகினேன். இது ஒருதலைக் காதல்என்றார்.

இந் நிலையில் திங்கள்கிழமை காலை தனது வீட்டில் விஜி தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.

Read more about: actress, sucide, viji
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil