»   »  விலாஸினியின் "ஜான்சி!

விலாஸினியின் "ஜான்சி!

Subscribe to Oneindia Tamil

"கரகாட்டக்காரி கை கொடுக்காவிட்டாலும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் விலாஸினி.

ஹீரோயினாக தமிழ் திரையுலகில் நுழைந்த விலாஸினி, பின்னர் பலான காரியங்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றவர்.விபச்சாரம் செய்ததாக கூறி கைதான விலாஸினி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக விடுதலையானார்.


விடுதலைக்குப் பிறகு படத் தயாரிப்பில் இறங்கினார். அவரது தயாரிப்பில் உருவான முதல் படம் "கரகாட்டக்காரி. இசைஞானிஇளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களைப் பலமாகக் கொண்டு உருவான அந்தப் படத்தில், முத்தல் மூஞ்சியுடன்விலாஸினியே ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

அதில் ரோஜா இருந்தும் கூட படம் படுத்துக் கொண்டது. அத்தோடு பல லட்சம் நஷ்டத்தையும் விலாஸினிக்கு சம்பாதித்துக்கொடுத்தது.

படம் நஷ்டத்தைக் கொடுத்தாலும் கூட கேசட் விற்பனை மூலம் நல்ல காசு பார்த்து விட்டாராம் விலாஸினி. இதனால் படம்போண்டியானது அவருக்குக் கவலையைக் கொடுக்கவில்லை

இப்போது அடுத்த படத்தைத் தயாரிக்க களம் குதித்து விட்டார். "ஜான்சி என்ற பெயரில் புதிதாக ஒரு படத்தை எடுக்கப் போகிறார்விலா. அவர்தான் படத்தின் நாயகியாம். தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகன் ராஜ் பாலாஜி அவருக்கு ஜோடியாகநடிக்கப் போகிறார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜான்சி உருவாகிறதாம். படத்தைஇயக்கப் போவது புதுமுகம் தினகரன். இவர் இயக்குநர் ஷாஜகானிடம் உதவியாளராக இருந்தவர். தேவா இசையமைக்கப்போகிறார்.

விபச்சார வழக்கிலிருந்து தப்பி வர ரொம்பவேக் கஷ்டப்பட்ட விலாஸினிக்கு அடுத்தடுத்து படம் எடுக்க எங்கிருந்துதான் காசுவருகிறதோ என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil