»   »  ராசியில்லா ரோஜா!!

ராசியில்லா ரோஜா!!

Subscribe to Oneindia Tamil
Vimala Raman
நானொரு ராசியில்லா ரோஜா என்று பாடாத குறையாக பெரும் சோகத்தில் இருக்கிறார் பொய் நாயகி விமலா ராமன்.

பொய் படம் மூலம், ஆஸ்திரேலியாவிலிருந்து கோலிவுட்டுக்குப் பறந்து வந்த நெடும் தேவதை விமலா ராமன். ஆனால் அவருக்கு கோலிவுட்டில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படவில்லை, மாறாக ரெட் போட்டு விட்டது கோலிவுட்.

பொய் படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியவில்லை. விமலா ராமனின் வெளிப்படையான பேச்சும், புத்திசாலித்தனமும் கோலிவுட்டார்களுக்குப் பிடிக்கவில்லையோ அல்லது புரிபடவில்லையோ என்னவோ, கோலிவுட்டில் விமலாவால் தேற முடியாமல் போய் விட்டது.

இதனால் மலையாளப் பக்கம் பார்வையைத் திருப்பினார் விமலா. தமிழால் கைவிடப்பட்ட விமலாவுக்கு, மலையாளம் வரவேற்பைக் கொடுத்தது.

சுரேஷ்கோபி, மோகன்லால் என முன்னணி ஸ்டார்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இங்கும் சோதனை குறுக்கிட்டது. அவர் மலையாளத்தில் நடித்த நான்கு படங்களுமே தோல்வியைத் தழுவி விட்டன. இதனால் ராசியில்லாத நடிகையாக மாறிப் போய் விட்டார் விமலா.

இந்த ஆண்டு அவர் மலையாளத்தில் சுரேஷ் கோபியுடன் டைம், பின்னர் பிரணயகாலம், சூரியன் என மூன்று படங்களில் நடித்தார். மூன்றுமே தோல்விப்படங்கள். சமீபத்தில் மம்முட்டியுடன் நடித்த நஸ்ரனி படமும் ரிலீஸானது. ஆனால் இதுவும் போன வேகத்திலேயே பொட்டிக்குத் திரும்பி விட்டதாம்.

தொடர்ந்து ஹர்ட் படங்களையே கொடுத்து வருவதால் விமலா ரொம்பவே நொந்து போயுள்ளாராம். தற்போது அவரது கைவசம் கல்கத்தா நியூஸ், காலேஜ் குமரன் என இரு படங்கள் மட்டுமே மலையாளத்தில் இருக்கிறதாம். இதுவும் தோல்வியடைந்தால் மறுபடியும் சென்னைக்கு வந்து தமிழில் அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil